
கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்பான பேச்சு எதுவென்றால் அது விஜய் டிவியின் பிக் பாஸ் தான் முதல் பகுதி வெளியான நேரத்தில் இருந்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் கமல் ஹாசனை பற்றியும் பல வித விமர்சங்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு ஜூலி தான் எல்லோரின் டார்கெட் இந்த பெண் அப்படி என்ன சாதித்து விட்டால் இவளை இன்ஹா நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று கடுமையான விமர்சனம் போய்கொண்டு இருக்கிறது.
15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு வசிக்க வேண்டும் என்பது தான் இந்த போட்டி. அவர்களை கண்கானிக்க 30 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு நாள் முழுவதும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களிடையே நடந்த முக்கிய சம்பவங்களை அன்று இரவு 9 மணிக்கு தொகுத்து விஜய் டிவி ஒளிபரப்பு செய்கிறது.
அதன்படி, நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியான, ‘மாநகரம்’ ஹீரோ ஸ்ரீயிடம், “இந்த செட்டுக்குள் வந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக்கொண்டார்கள். ஆனால், என்னை கட்டிப்பிடிக்க தான் ஆள் இல்லை. நீ என்னை விட்டு போகாதே..என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப்பாரு…” என்று பேசியுள்ளார்.
இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டதும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரொம்ப ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது. அதுமட்டுமல்ல, ஜூலியின் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமும் நடைபெற்று வர, போக போக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறப்போகிறதோ, என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடாக போய்விடும் போல தோணுது விஜய் டிவி தன டி ஆர்.பி ரேட்டிங் நிலை நிறுத்த தன தொலைகாட்சியை முதல் இடத்துக்கு கொண்டுவருவதுக்கு 14 பலிக்கடா அவர்களோடு உலகநாயகன் கமல்ஹாசன்