தமிழ்திரையுலகில் நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல முகங்கள் கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் தனது திறமையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுகிறார். உலகம் முழுவதும் சிறந்த நடிகர் என்று சொன்ன திரை உலகத்திற்கு வேறு ஒரு அவதாரம் எப்ப எடுப்பார் என்று எல்லோரும்ஆவலோடு எதிர் பார்த்த அவதாரம் இயக்குனர் அவதராம்.
இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து உள்ளார். சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்குநராகவும் தனது திறமையை வெளிப்படுத்த இருக்கிறார். தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் ராஜ்கிரண் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். வேங்கை படத்தில் இணைந்து நடித்த நட்பினால் தனுஷ் இயக்கும் படத்தில் ராஜ்கிரண் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகின.
மேலும் இப்படத்தில் நடிக்க நடிகர்களை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், மிகவிரையில் நடிகர்களை முடிவு செய்து அறிவிக்கவுள்ளனர் படக்குழு.
படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கயிருக்கிறது. வேங்கை படத்தில் தனுசுடன் ராஜ்கிரண் இணைந்து நடித்தது குறிப்பிடதக்கது.