Wednesday, June 24
Shadow

சீனா உலக சினிமா விழாவில் கலந்து கொள்ளும் தனுஷின் வட சென்னை

தமிழ் சினிமாவில் இன்று மிக பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த படம் என்றால் அது வட சென்னை தான் காரணம் இந்த படத்தின் கூட்டணி தான் வெற்றிமாறன் தனுஷ் படைப்புகள் எல்லாமே மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயமே அதோடு வர்த்தக ரீதியாக மட்டும் இல்லை கதையம்சம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கு எல்லா படங்களும் உலக தரத்துக்கு இருக்கும் அந்த வகையில் தற்போது இணைந்து இருக்கும் வட சென்னை படத்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு எதிர்பார்ப்பு அடங்கியுள்ளது

வடசென்னை படத்தின் டைட்டில் போல கொஞ்சம் கரடுமுரடான படம் தனுஷ் லுக் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை மாடன் பொண்ணாக வந்த ஆண்ட்ரியா எல்லோரின் லுக்கும் மிகவும் வித்தியாசம் படத்தின் பாடல்கள் மக்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது.அதோடு படம் உலக சினிமா தரத்துக்கு உள்ளதாம் அதனால் இந்த அடுத்தமாதம் சீனா உலக சினிமாபோட்டியில் மூன்றாம் நாள் திரையிடபோகிறார்கள். இது இந்த படத்துக்கு கிடைத்த மிக பெரிய கௌரம்.

இதோடு மட்டும் இல்லாமல் பல நாடு சினிமா விழாவில் கலந்துகொள்ளபோகிரதாம் பட குழு மிக பெரிய சந்தோஷத்தில் உள்ளனர்