
விஜய் சேதுபதியின் 96 படம் ஒரு உணர்ச்சி பூர்வமான காதல் படம் இந்த படத்தில் முதல் முறையாக த்ரிஷாவுடன் முதல் முறையாக இணைகிறார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. விஜய் சேதுபதி பேசியதாவது : 96-ல் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் கதை. 96 ஓர் இரவில் படம் நகரும்.
என் வீட்டில் நடந்தது வருமான வரி சோதனை கிடையாது. நான் முறையாக வரி செலுத்துபவன். முன்கூட்டியே வரி செலுத்தி உள்ளேன். அது விஷயமாக அதிகாரிகள் வந்தனர், எனது ஆடிட்டரால் வந்த குழப்பம் அது.
ஒரு விஷயம் தவறாக சொன்னால் தான் வேகமாக பரவும், நல்லது தான். இதனால் பப்ளிசிட்டி தான் கிடைக்கும். சமீபகாலமாக வெளியில் கண்டபடி பேசிவிட்டு அட்மின் மீது பழி போடுகிறார்கள். அது தான் இப்போது டிரண்ட்டாக உள்ளது. அது மாதிரி தான் அது என் வீடே இல்லை, வீடு போன்று செட் அமைத்து ரெய்டு பண்ணாங்க என்றார்.
