Monday, April 28
Shadow

‘காலா’வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்வுடன் இணைகிறார் தனுஷ் என்னவா தெரியுமா?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘காலா’. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஹியூமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியோடு மும்பை படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படபிடிப்பு முதல் கட்டம் நாளையுடன் முடிவடைகிறது நாளை மீண்டும் சென்னை திரும்புகிறார்.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இந்த மாதம் சென்னையில் ஆரம்பிக்கிறார்கள். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் தனுஷ் முதல் முறையாக மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்வுடன் இணைகிறார் இந்த படம் மூலம். என்பது மேலும் இந்த படத்தின் சிறப்பு

இந்நிலையில், ‘காலா’வில் ரஜினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் மறுப்பு தெரிவிக்காததால் இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும், இப்படத்தில் பங்கஜ் திரிபாதி முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ‘தபாங் 2’, ‘சிங்கம் ரிட்டன்ஸ்’, ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை படப்பிடிப்பைத் தொடர்ந்து சென்னையில் தாராவி போன்ற அரங்கில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

Leave a Reply