Tuesday, October 27
Shadow

தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்

தனுஷ் தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து உள்ள ஒரு சகலகலாவல்லவன் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர் சினிமாவில் தனுஷ் பல அவதாரம் எடுத்துள்ளார் குறிப்பாக பாடகர் பாடல்சிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட நடிகர் என்றாலும் இவரின் நிஜ வாழ்கையில் பல இன்னல்கள் வந்து சேருகிறது. அதற்கு காரணம் நிரந்தர நட்பு என்பது கிடையாது யாருடன் பழகினாலும் அவர்களின் நட்பு சில காலமே தான் எப்போதும் தனித்து இருப்பார் . இதுவே இவருக்கு பல நேரங்களில் இவருக்கு எமனாக அமைந்துள்ளது .

சமீபத்தில் இவருக்கு தொடர்ந்து தொந்தரவு ஒன்று போனால் ஒன்று என்று தான் வந்துகொண்டு இருக்கிறது பாடகி சுசித்ரா அடுத்து இவரின் புதிய பெற்றோர்கள் இந்த புதிய அம்மா அப்பா விளையாட்டுக்கு முற்று புள்ளி வருகிறது வாங்க பாக்கலாம் .

சிவகங்கையை சார்ந்த தம்பதியினர் தனுஷ் எங்கள் பிள்ளை என வழக்கு தொடுத்தனர், இதை தொடர்ந்து தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

இதன் பிறகு தனுஷ் உடலில் இருந்து அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளது என ஒரு செய்தி வர, தனுஷிற்கு மிகவும் நெருக்கடியாக அமைந்தது.

ஆனால், தற்போது அந்த தம்பதியினர் மகன் சிறு வயதில் ஓடி போனவன் கிடைத்தே விட்டானாம், அவனே போலிஸில் ஆஜராகியுள்ளான்.

இதனால், பல நாட்களாக சுற்றி வந்த பிரச்சனை தனுஷிற்கு ஒரு வழியாக தீர்ந்தது என கூறப்படுகின்றது.

Leave a Reply