Monday, December 9
Shadow

விஜய் 62 படத்தின் இயக்குனர் மற்றும் ரிலீஸ் தேதி உறுதியானது .

விஜய் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் இவரின் ரசிகர் பட்டாளம் உலகம் முழுவது பரவியுள்ளது விஜய்யை பற்றிய எந்த செய்தி வந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசம் குறிப்பாக விஜய்யின் படத்தை பற்றிய செய்தி என்றால் மேலும் உற்சாகமாக ஆகிவிடுவார்கள். விஜய் தற்போது விஜய் 61 படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்து கொண்டுள்ளார்.

பொதுவாக விஜய் ஒரு படம் முடியாமல் தன் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வராது ஆனால் இப்ப நிலைமை தலை கிழ் ஒரு படம் முடிவடைவதற்கு முன்பே அடுத்த படத்தின் வேலைகள் ஆரம்பம் ஆகிவிடுகிறது இப்பவும் அப்படி தான் விஜய் 62 படத்தின் இயக்குனர் யார் என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது விஜய் அடுத்து ஏ.ஆர் முருகதாஸ்வுடன் தான் இணைவார் என்று பேசப்பட்டது ஆனால் ஒரு சிலர் இல்லை என்று குழப்பம் செய்தனர். ஆனால் விஜய் எந்த இயக்குனருடன் இணையபோகிறார் என்று கசிந்துள்ளது.

துப்பாக்கி, கத்தி வெற்றியைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவேண்டும் என்பதுதான் ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கி படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. எந்த நேரத்திலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply