
மூன்றாவது படத்திலேயே SIIMA விருது: துருவ் விக்ரமுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்
‘பைசன் காளமாடன்’ படத்தில் நடித்ததற்காக துருவ் விக்ரமுக்கு SIIMA விருதுகளில் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. இளம் நடிகரின் திரைப்பயணத்தில் இந்த விருது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ படத்தில், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த இளைஞராக துருவ் விக்ரம் நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப உடலமைப்பு, தோற்றம், உடல்மொழி என பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு அவர் நடித்திருந்தார். குறிப்பாக கதாபாத்திரத்தின் போராட்டங்களையும், உணர்வுகளையும் திரையில் வெளிப்படுத்திய விதம் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தது.
திரைத்துறையில் அறிமுகமானது முதல் கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி வரும் துருவ் விக்ரம், ‘பைசன் காளமாடன்’ மூலம் தனது நடிப்பில் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது மூன்றாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் பிரிவில் SIIMA விருது கிடைத்திருப்பது, அவரது பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், அதிதி ஆனந்த் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ஆமீர், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பைசன் காளமாடன்’ படத்துக்காக கிடைத்துள்ள SIIMA விருது, துருவ் விக்ரமின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தற்போது அவர் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ படத்தில் நடித்து வருகிறார். Mythri Movie Makers தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார்.
வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வரும் துருவ் விக்ரமின் அடுத்தகட்ட திரைப்பயணம் எப்படி அமையப் போகிறது என்பதற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhruv Vikram Wins SIIMA Best Actor Award for ‘Bison Kaalamaadan’
Dhruv Vikram has added a new milestone to his acting journey by winning the SIIMA Best Actor award for his performance in Bison Kaalamaadan. The recognition comes as a significant achievement for the young actor, who has been steadily carving a space for himself with diverse roles.
Directed by Mari Selvaraj, Bison Kaalamaadan features Dhruv Vikram in the role of a young sportsperson whose journey is shaped by courage, determination and personal struggles. The actor underwent noticeable physical and performance changes to suit the character, including adapting his appearance, body language and mannerisms.
His portrayal of the character’s emotions and struggles emerged as one of the key aspects of the film. Dhruv’s performance also showcased a different side of his acting abilities, marking another step forward in his young career.
Winning the Best Actor award at SIIMA for his third film makes the achievement particularly noteworthy. Since his debut, Dhruv Vikram has been exploring varied characters, and the recognition for Bison Kaalamaadan has added further attention to his growing body of work.
Produced by Sameer Nair, Deepak Segal and Aditi Anand under Applause Entertainment, along with Pa. Ranjith’s Neelam Studios, the film features an ensemble cast including Anupama Parameswaran, director Ameer, Lal, Pasupathy and Rajisha Vijayan in prominent roles.
Following the SIIMA recognition, expectations are now building around Dhruv Vikram’s upcoming projects. He is currently working on Jackie – No Retakes Allowed, an action film produced by Mythri Movie Makers and directed by Karan Arvind Kumar.
With Bison Kaalamaadan earning him his first major recognition at SIIMA, Dhruv Vikram’s next phase in cinema is certainly one to watch as he continues to explore different genres and characters.
