
அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios
தமிழ் சினிமாவில் புதிதாக களமிறங்கியிருக்கும் Silver Tree Studios, தனது முதல் படைப்பை தொடங்கியுள்ளது. அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘Production No.1’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள Silver Tree Studios-ன் முதல் முயற்சியாக இப்படம் உருவாகிறது. ‘Puriyatha Puthir’, ‘Ispade Rajavum Idhaya Raniyum’, ‘Michael’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார்.
அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இந்தக் கதை, காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் இணைத்த ஒரு ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.

கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். Silver Tree Studios மற்றும் POP Entertainment இணைந்து இப்படத்தை உருவாக்குகின்றன. விஜய் எம்.பி. மற்றும் சண்முக பிரியன் இணைந்து தயாரிக்க, POP Entertainment சார்பில் பர்வீன் பானு இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
முதல் படத்திலேயே அர்ஜுன் தாஸ், ரஞ்சித் ஜெயக்கொடி, ஷான் ரோல்டன் என சுவாரஸ்யமான கூட்டணியை உருவாக்கியுள்ள Silver Tree Studios, குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
‘Production No.1’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arjun Das and Ranjit Jeyakodi Join Forces for Silver Tree Studios’ Production No.1
Silver Tree Studios, the newly launched production house, has officially begun its filmmaking journey with its maiden project, tentatively titled Production No.1. The shooting commenced with a traditional pooja ceremony in Chennai.
The film features Arjun Das in the lead role and is directed by Ranjit Jeyakodi, who is known for films such as Puriyatha Puthir, Ispade Rajavum Idhaya Raniyum and Michael. The project is being made in association with POP Entertainment.
Interestingly, the film also marks the Tamil debut of Preethi Pagadala, who will be seen as the female lead opposite Arjun Das.
Set against the backdrop of family and relationships, Production No.1 is said to be a family romance drama that blends love, emotions, humour and strong character-driven moments. The makers are looking to explore the dynamics of relationships while bringing together an engaging mix of romance and family entertainment.
The film has an interesting ensemble cast, including K. S. Ravikumar, Saravanan, Yogi Babu, Bala Saravanan, Ashwini Nambiar, Mona Bedre and Jagan Krishnan in prominent roles.
Adding further interest to the project, Sean Roldan has been brought on board as the music composer.
Vijay M.P. and Shanmuga Priyan are jointly producing the film under the Silver Tree Studios banner, while Parveen Banu serves as the Co-Producer on behalf of POP Entertainment.
With an intriguing combination of Arjun Das, Ranjit Jeyakodi and Sean Roldan, Silver Tree Studios has chosen a family-oriented story for its debut venture. The film has now officially gone on floors, marking the beginning of the production house’s journey towards creating stories across different genres with new ideas and talented filmmakers.
Further updates regarding the film, including its title, first look and other details, are expected to be announced in the coming days.
