
“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையை சொல்லும் பொறுப்பு எங்களுடையது; திரைக்கதை அவரே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்!” – கமல்ஹாசன்
இந்திய இசை உலகின் அழியாத அடையாளமாகத் திகழும் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, தற்போது வெள்ளித்திரையில் புதிய வடிவம் பெறுகிறது. ‘எம்.எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். கீதா ஆர்ட்ஸ், ராக்லைன் என்டர்டெய்ன்மென்ட், பென்னி வாசு பிலிம்ஸ் சார்பில் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தின் பாரம்பரியமான தொடக்கத்தை நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

விழாவின் முக்கியமான அம்சமாக, எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பிரபலமான பாடல்களை இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து அவருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அவரது குடும்ப உறுப்பினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையில் வெற்றிகளை விட முக்கியமானது அவரது மனிதநேயம்”
படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனூரி பேசும்போது, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை வெறும் வெற்றி வரலாறாக பார்க்க முடியாது என்றார்.
மதுரையில் இசையின் சூழலில் வளர்ந்த ஒரு சிறுமி, பின்னர் தென்னிந்தியாவைத் தாண்டி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையாக மாறிய பயணத்தின் பின்னால் ஏராளமான தியாகங்களும், சவால்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மகள், பாடகி, நடிகை, கலைஞர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், அடுத்த தலைமுறைக்கு சொல்லக்கூடிய பல அழுத்தமான செய்திகளை எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை விட்டுச் சென்றிருப்பதாகவும் கௌதம் தின்னனூரி கூறினார்.
“அவரது அர்ப்பணிப்பு, பக்தி, மனிதநேயம் ஆகியவற்றை நேர்மையாக திரையில் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்” என்றார்.

ஒரு வாழ்க்கையை படமாக்குவதும்… ஒரு இசை உலகத்தை திரையில் கொண்டு வருவதும்
பாடலாசிரியர் மதன் கார்க்கியின் பார்வையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது சாதாரண முயற்சி அல்ல.
சிறுவயதில் தனது தாயார் குமுதம் பத்திரிகைக்காக எம்.எஸ். சுப்புலட்சுமியை நேர்காணல் செய்தபோது அவரை பார்த்ததாகவும், பின்னர் அவரது வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளத் தொடங்கியபோதுதான் அவர் எதிர்கொண்ட தடைகளும், அவற்றைத் தாண்டிய சாதனைகளும் புரிந்ததாகவும் மதன் கார்க்கி பகிர்ந்துகொண்டார்.
கௌதம் தின்னனூரி எழுதிய திரைக்கதையை படித்தபோது, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை எவ்வளவு ஆழமானது என்பது புரிந்ததாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், இந்தப் படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சவால் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனிருத்துக்கு ஒரு பக்கம் நவீன இசையை எதிர்பார்க்கும் ரசிகர்கள்; இன்னொரு பக்கம் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசையின் மாண்பை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. ராஷ்மிகாவுக்கு இதுவரை நடித்த கதாபாத்திரங்களைத் தாண்டி எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாற வேண்டிய சவால். கௌதம் தின்னனூரிக்கு ஏற்கனவே பல தலைமுறைகளால் மதிக்கப்படும் ஒரு ஆளுமையின் வாழ்க்கையை திரையில் நேர்மையாக பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு.

“ஏழு ஆண்டுகளாக காத்திருந்த படம்”
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் முயற்சி கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக தெரிவித்தார்.
அல்லு அரவிந்த், பென்னி வாசு ஆகியோருடன் இணைந்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, திட்டமிட்டு இந்தப் படத்தை உருவாக்கியதாக அவர் கூறினார்.
இந்த முயற்சியில் மிக முக்கியமானதாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்ததாகவும், அவர்களிடம் இருந்து திரைப்படத்தை உருவாக்குவதற்கான உரிமையைப் பெற்ற பிறகே இந்தப் பயணம் அடுத்த கட்டத்துக்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஷ்மிகாவை எம்.எஸ். சுப்புலட்சுமியாக தேர்வு செய்வதும் எளிதான முடிவு இல்லை என்றும், அவரிடம் அணுகியபோது அவர் மனதார இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் ராக்லைன் வெங்கடேஷ் கூறினார்.
“மீராவை மீண்டும் பாருங்கள்” – கலைப்புலி எஸ்.தாணு
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியை வரவேற்ற தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, அவரது நடிப்பில் வெளியான ‘மீரா’ திரைப்படத்தையும் படக்குழுவினர் கவனமாகப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அந்தப் படத்தின் மூலம் எம்.எஸ். சுப்புலட்சுமியின் நடை, உடை, உடல் மொழி உள்ளிட்டவற்றை புரிந்துகொள்ள முடியும் என்றும், அவை தற்போதைய படைப்புக்கு உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனிருத்துக்கு இது சவாலான இசைப் பயணமாக இருக்கும் என்றாலும், இந்தப் படம் அவரது இசைப் பயணத்தில் புதிய அனுபவமாக அமையும் எனவும் தாணு கூறினார்.

“இது பல பாகங்களாக எடுக்க வேண்டிய வாழ்க்கை”
நடிகர் சமுத்திரக்கனி, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
கௌதம் தின்னனூரியுடன் பேசியபோது, அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களே பல பாகங்களாக திரைப்படம் உருவாக்கும் அளவுக்கு இருந்ததாகவும், இந்தப் படம் ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாக அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
நடிகர் சிவகுமார் பேசும்போது, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் முன்னெடுப்பதை வரவேற்றார்.
ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகம் ஒரே குடும்பமாக இயங்கியதை நினைவுபடுத்திய அவர், தற்போது மீண்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரையுலகங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
“அவர்தான் எங்களை தேர்வு செய்திருக்கிறார்” – அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர் அல்லு அரவிந்துக்கு இந்தப் படம் ஒரு தயாரிப்பு முயற்சியாக மட்டும் தெரியவில்லை. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தங்களுக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று அவரே தேர்வு செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மியூசிக் அகாடமியில் வைக்கப்பட்டிருந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் மிகப்பெரிய புகைப்படத்தைப் பார்த்தபோது அந்த உணர்வு மேலும் வலுவடைந்ததாகவும் அல்லு அரவிந்த் கூறினார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை வெறும் பாடகியின் சாதனைகளாக மட்டும் பார்க்க முடியாது என்றும், இளம் வயதில் அவர் எதிர்கொண்ட சிக்கல்கள், ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் இசை மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவைதான் இந்தப் படத்தை உருவாக்கத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
அனிருத்தை இந்தப் படத்துக்கு தேர்வு செய்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். இன்றைய இளம் தலைமுறையையும் முந்தைய தலைமுறையின் இசை உலகத்தையும் இணைக்கும் பாலமாக அனிருத் இருப்பதாகக் கூறிய அல்லு அரவிந்த், எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசையை அப்படியே மீண்டும் உருவாக்குவது இந்தப் படத்தின் நோக்கம் அல்ல என்றும் தெரிவித்தார்.

“எம்.எஸ். அம்மா – இசையின் ஒன்றிணைக்கும் சக்தி”
படத்தின் தொடக்க விழாவில் பேசிய கமல்ஹாசன், எம்.எஸ். சுப்புலட்சுமியுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.
தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் இசை, நடனம், உதவி இயக்குநர் பணிகள் என பல்வேறு துறைகளைத் தேடித் தேடி பயணித்ததை நினைவுகூர்ந்த அவர், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை தன்னை எப்போதும் ஈர்த்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பாடியதையும், ஒவ்வொரு மொழியிலும் அவரது உச்சரிப்பு தனித்துவமாக இருந்ததையும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார்.
‘ஹே ராம்’ படத்துக்காக எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் அப்போது அவரது உடல்நிலை காரணமாக அது நிறைவேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் டி.கே. பட்டம்மாளின் குரலை அந்தப் படத்தில் பதிவு செய்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி ஆகிய மூவரிடமும் தனக்கு ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாகக் கூறிய கமல்ஹாசன், அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தனக்கு கிடைத்த கௌரவமாகக் கருதுவதாக தெரிவித்தார்.
அதேபோல், ராஷ்மிகா ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் சவாலை சுட்டிக்காட்டிய அவர், எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பது எளிதான விஷயம் அல்ல என்றும், ஆனால் அவருக்கு ஆதரவாக சிறந்த படக்குழு இருப்பதாகவும் கூறினார்.
“இந்தப் படத்தின் திரைக்கதையை எம்.எஸ். அம்மாவே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்”
கௌதம் தின்னனூரிக்கு இந்தப் படம் மிகப்பெரிய பொறுப்பு என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், அதற்காக உயிரைக் கொடுக்க வேண்டியதில்லை; கடுமையாக உழைத்தால் போதும் என்றார்.
அதற்கும் மேலாக அவர் கூறிய ஒரு வரி, விழாவின் கவனத்தை ஈர்த்தது:
“இந்தப் படத்தில் தவறு நேராது. ஏனெனில் இப்படத்திற்கான திரைக்கதையை எம்.எஸ். அம்மா எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை மெருகேற்றினால் போதும்.”
எம்.எஸ். சுப்புலட்சுமியை வெறும் வணங்க வேண்டியவராக மட்டுமல்லாமல், அனைவரின் அன்புக்கும் உரியவராக திரையில் காட்ட வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை, எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு பாடகி என்ற அடையாளத்தைத் தாண்டியவர். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட பல துறைகளில் திறமை கொண்டவர். அவரது ‘மீரா’ திரைப்படத்தின் பாடல்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அனிருத்துக்கும் இந்தப் படம் ஒரு புதிய இசைப் பரிமாணத்தைத் தர வேண்டும் என்று வாழ்த்திய கமல்ஹாசன், ‘அரங்கேற்றம்’, ‘சங்கராபரணம்’ போன்ற படங்கள் அந்தந்த கலைஞர்களின் பயணத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைப் போல, இந்தப் படமும் அனிருத்தின் திரையிசைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைய வேண்டும் என்றார்.
இறுதியில், இசைக்கு இருக்கும் ஒன்றிணைக்கும் சக்தியைப் பற்றி பேசிய அவர், எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலும் அதே சக்தியைக் கொண்டது என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவையும், இந்தியாவிலிருந்து உலக இசை அரங்கையும் இணைத்த அந்தக் குரலின் வாழ்க்கை தற்போது திரையில் பதிவு செய்யப்பட உள்ளது.
அந்தப் பயணத்தின் முதல் கிளாப் மியூசிக் அகாடமியில் விழுந்திருக்கிறது.

“M.S. Subbulakshmi Has Already Written the Script of Her Life” – Kamal Haasan at the Launch of M.S.: A Legacy on Screen
The life of legendary singer and Bharat Ratna awardee M.S. Subbulakshmi is set to come alive on the big screen with M.S.: A Legacy on Screen. The film was formally launched in Chennai at the iconic Music Academy, a venue that holds a special place in the musical journey of M.S. Subbulakshmi.
Actor and Rajya Sabha MP Kamal Haasan sounded the ceremonial clap to mark the beginning of the film.
Directed by National Award-winning filmmaker Gautham Tinnanuri, the film features Rashmika Mandanna in the role of M.S. Subbulakshmi. Music for the project will be composed by Anirudh Ravichander.
The film is being jointly produced by Allu Aravind, Rockline Venkatesh and Bunny Vasu under the banners of Geetha Arts, Rockline Entertainment and Bunny Vasu Films.
The launch event brought together members of M.S. Subbulakshmi’s family, well-wishers, filmmakers and leading members of the Tamil film industry. As a tribute to the legendary musician, artistes also performed some of the timeless songs associated with her voice.
Gautham Tinnanuri: “Her humanity is as important as her achievements”
Speaking at the event, director Gautham Tinnanuri said that the film is not merely about documenting the achievements of one of India’s greatest musicians.
He recalled how M.S. Subbulakshmi, who was born and raised in Madurai in an environment steeped in music, went on to become an internationally recognised cultural icon.
According to the director, the Bharat Ratna, her legendary concerts and her achievements were only one part of her extraordinary journey. Her humanity, sacrifices, devotion and determination were equally significant.
“She was a daughter, singer, actress, woman and artiste, with many dimensions to her personality. Her life also carries powerful messages for the generations that follow,” he said.

Gautham added that the entire team approached the project with immense respect and affection for M.S. Subbulakshmi and promised to sincerely bring her dedication and devotion to the screen.
Madan Karky: “Her life deserves to be told”
Lyricist Madan Karky said that making a film on M.S. Subbulakshmi’s life had been a long-standing dream for many people.
He recalled that his mother had once interviewed M.S. Subbulakshmi for Kumudam magazine when he was a child, giving him an opportunity to see the legendary singer in person.
It was only years later, while working on music projects and learning more about her life, that he began to understand the magnitude of her journey.
Karky said reading Gautham Tinnanuri’s screenplay made him realise how much M.S. Subbulakshmi had overcome to reach the heights she eventually achieved.
He also pointed out that everyone involved in the film faces a unique challenge.
For Gautham, it is the responsibility of translating the life of an iconic personality to cinema. For Anirudh, it is about creating music that connects with today’s generation while respecting the musical legacy of M.S. Subbulakshmi. For Rashmika, the challenge is to completely transform herself into a personality who has been deeply etched in the memories of generations.
Rockline Venkatesh: “This journey began seven years ago”
Producer Rockline Venkatesh revealed that efforts to bring M.S. Subbulakshmi’s life to the screen had been underway for nearly seven to eight years.
He said that he, Allu Aravind and Bunny Vasu had spent years researching and developing the project before arriving at the current version.
According to Venkatesh, several people had previously hoped to make a film on M.S. Subbulakshmi, but the project eventually came together with the support of her family.
He also spoke about the process of choosing Gautham Tinnanuri as director and Rashmika Mandanna for the lead role.
Venkatesh said that finding the right actress to portray M.S. Subbulakshmi was not an easy decision, but Rashmika readily accepted the opportunity when approached.
He stressed that the support and cooperation extended by M.S. Subbulakshmi’s family members have been central to bringing the project to life.
Kalaipuli S. Thanu: “Watch Meera to understand her”
Producer Kalaipuli S. Thanu welcomed the ambitious project and recalled the unparalleled place M.S. Subbulakshmi occupies in Indian music.
He suggested that the team revisit her iconic film Meera to study her mannerisms, costumes, body language and screen presence while preparing for the new film.
Thanu also spoke about the responsibility before Anirudh, noting that composing music for a film about M.S. Subbulakshmi would be a unique challenge.
Samuthirakani: “Her story is big enough for several films”
Actor Samuthirakani said that M.S. Subbulakshmi’s life contains enough material to potentially span several films.
He recalled his conversations with Gautham Tinnanuri about the legendary singer and said the number of stories and experiences from her life left a deep impression on him.
He expressed his hope that M.S.: A Legacy on Screen would become an important historical record of her extraordinary journey.
Allu Aravind: “It feels like M.S. Amma chose us”
Producer Allu Aravind said that the project feels much more personal than simply making a biographical film.
He recalled seeing a huge photograph of M.S. Subbulakshmi at the Music Academy before the event and said the moment made him feel as though she herself had chosen the team to tell her story.
Aravind explained that the film is not being made simply because M.S. Subbulakshmi was a legendary singer and musician. Her life contained many lesser-known experiences, particularly from her younger years, that deserve to be explored.
He also explained why Anirudh was chosen as the composer.
According to Aravind, Anirudh has the ability to connect today’s younger audience with the musical sensibilities of earlier generations. At the same time, the film will not attempt to simply recreate M.S. Subbulakshmi’s music.
“Her music cannot simply be recreated. It is something that belongs to a different level,” he said.
Rashmika Mandanna: “I feel only gratitude”
Rashmika Mandanna described the opportunity to portray M.S. Subbulakshmi as a deeply emotional responsibility.
She expressed gratitude to M.S. Subbulakshmi and said she hoped that the legendary singer would somehow be present in spirit at the event and watch over the team.
Rashmika also acknowledged the magnitude of the role and sought the blessings of M.S. Subbulakshmi, her family and her well-wishers.
“I promise to give my very best to this creation,” she said.
Kamal Haasan: “She was the voice of South India”
Kamal Haasan, who launched the film, shared several personal memories and reflections about M.S. Subbulakshmi.
Speaking about his own early journey in cinema, he recalled moving through acting, music, dance and filmmaking before finding his place in the industry.
He said M.S. Subbulakshmi represented the unifying power of music and, in particular, the voice of South India.
He highlighted her command over Tamil, Sanskrit, Hindi and Telugu and praised her exceptional pronunciation across languages.
Kamal also recalled his desire to have M.S. Subbulakshmi sing for his film Hey Ram. Although that did not materialise due to her health at the time, he eventually recorded D.K. Pattammal for the film.
He said he had been fortunate to receive the blessings of three iconic women of Indian music—M.S. Subbulakshmi, D.K. Pattammal and M.L. Vasanthakumari.
“Gautham doesn’t have to give his life for this film—he just has to work hard”
Kamal Haasan also addressed the responsibility resting on director Gautham Tinnanuri.
He offered an unusual but memorable observation about the screenplay: according to him, the story of M.S. Subbulakshmi’s life itself provides the foundation for the film.
“The screenplay has already been written by M.S. Amma through the life she lived. The director only has to polish it,” he said.
Kamal stressed that the film should not portray M.S. Subbulakshmi merely as someone to be worshipped. Instead, it should capture the affection, love and admiration people had for her.
A new challenge for Anirudh and Rashmika
Kamal also spoke about the challenges facing Anirudh and Rashmika.
He said composing music for a film centred on M.S. Subbulakshmi could become a significant new chapter in Anirudh’s musical journey.
For Rashmika, he acknowledged the enormous challenge of stepping into the shoes of an icon whose voice and personality are already deeply familiar to millions.
Kamal encouraged her to embrace the role with confidence, adding that the film has a strong team to support her.
He also described M.S. Subbulakshmi as an all-round artiste who was not just a singer but was also associated with acting, dance and the veena.
A fitting venue for a legendary voice
The choice of the Music Academy for the launch carried its own significance.
The venue has been closely associated with M.S. Subbulakshmi and generations of Indian classical musicians. It was therefore a fitting setting for the first official step of a film that seeks to chronicle her life.
Kamal Haasan also spoke about the way South Indian cinema has historically shared a common cultural space, recalling his own association with Telugu cinema and the connections between the Tamil, Telugu and Kannada industries.
He emphasised the unifying power of art and music and said M.S. Subbulakshmi’s legacy represents that spirit of unity.
With the ceremonial clap now done, M.S.: A Legacy on Screen begins its journey to bring one of India’s most celebrated musical icons and her lesser-known life story to a new generation of audiences.
