Thursday, April 25
Shadow

எனக்கு வாய்த்த அடிமைகள் – திரைவிமர்சனம் (ரசிக்க சிரிக்க )Rank 5/3

எனக்கு வாய்த்த அடிமைகள் இன்று வெளியாகி காமெடி படம் நடிகர் ஜெய்க்கு ஒரு சிறய இடைவெளிக்கு பின் வெளியாகி இருக்கம் படம் என்று தான் சொல்லவேண்டும் படத்தின் டைட்டில்க்கு கதைக்கும் சமந்தம் ஒன்றும் இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் படம் நட்பின் அருமையையும் காதலை பற்றியும் சொல்லி உள்ள படம் இயக்குனர் காமெடி படம் தான் எடுக்க போகிறோம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து செயல்பட்டுள்ளார். படம் ஆரமிபித்த முதல் காட்சியில் இருந்து இறுதிவரை காமெடிக்கு பஞ்சம் இல்லை மிகவும் கலப்பாக சொல்லி இருக்கிறார் .

இந்த படத்தில் நடிகர் ஜெய் கருணாகரன் காளி வெங்கட் நவீன் நான் கடவுள் ராஜேந்திரன் தம்பிராமையா பிரனிதா கௌரவ தோற்றத்தில் அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.அதே போல சந்தானமும் ஒரு முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் படத்துக்கு இசை சந்தோஷ் தயாநிதி ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி இயக்கம் அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இந்த படத்தை இயக்கயுள்ளர்.

சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் ஜெய், அதே கம்பெனியில் கூடவே பணிபுரியும் பிரணிதா மீது காதல் கொள்கிறார். அவளிடம் தனது காதலை சொல்வதற்கு முன்பே இரண்டு பேரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் கசமுசாவும் நடந்துவிடுகிறது. அதன்பின்னர், தனது காதலை அவளிடம் சொல்லி, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்நிலையில், ஒருநாள் பார்ட்டியில் வேறொருவருடன் பிரணிதா நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ஜெய், மனமுடைந்து அவளை பிரிந்து செல்கிறார். மிகவும் மன உளைச்சலில் இருக்கும் ஜெய், இதற்காக மனோதத்துவ நிபுணரான தம்பி ராமையாவிடம் செல்கிறார். ஆனால், தம்பி ராமையாவின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெய், ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.

தன்னுடைய தற்கொலை முடிவை நண்பர்களான காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர்களிடம் சொல்கிறார் ஜெய். ஆனால், அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் ஜெய் தற்கொலை செய்துகொள்ளப்போவது உண்மைதான் என்பதை அறிந்து அவரை காப்பாற்ற மூவரும் புறப்படுகிறார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

தற்கொலை முடிவுக்கு போன ஜெய், டிவியில் சந்தானத்தின் பேச்சை கேட்டு மனம் திருந்தி தற்கொலை முடிவை கைவிடுகிறார். அதன்பின்னர், தன்னை காப்பாற்ற புறப்பட்ட நண்பர்கள் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதை அறிந்து கொள்கிறார். அவர்களை ஜெய் எப்படி மீட்டார்? ப்ரணிதாவுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

ஜெய் ராஜா ராணி படத்துக்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்லலாம் காரணம் முழு காமெடி வழக்கம் போல காமெடி யில் ஒரு ரவுண்டு வந்துள்ளார் என்று தான் சொல்லணும் தற்கொலை செய்ய போகும் ஜெய் அதை செய்யாமல் அவர் செய்யும் காட்சிகள் சும்மா அரங்கத்தை அதிரவைக்கிறது அதே போல் தம்பிராமையாவை செய்யும் டார்ச்சர் அருமை ரசிக்க வைக்கிறது.

நாயகி பிரனிதா பெருசா ஒன்னும் வேலையில்லை கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் உணர்ந்து செய்துள்ளார். பேருக்கு தான் நாயகி என்று சொல்லணும் அந்த அளவக்கு காட்சிகள் இல்லை

படத்தின் முக்கிய பங்களிப்பு என்றால் அது காளி வெங்கட் , கருணாகரன் மற்றும் நவீன் படத்துக்கு மிக முக்கிய பலம் என்றும் சொல்லணும் குறிப்பாக காளி வெங்கட் நடிப்பும் காமெடியும் ரசிக்க வைக்கிறது அதே போல கருணாகரன். நவீன் அவருக்கு கொடுத்த வாய்ப்பை மிகவும் யதார்த்தமாக செய்துள்ளார்.

மனோதத்துவ நிபுணராக வரும் தம்பி ராமையா தன் பங்குக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார். கருப்பு ராக்காக வரும் மொட்டை ராஜேந்திரன், டிவி தொகுப்பாளராக வரும் படவா கோபி ஆகியோரும் படத்தின் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். சந்தானம் ஒரேயொரு காட்சியில் வந்தாலும், படத்தில் காதலர்களுக்கு நல்ல கருத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

ஒரே காட்சிக்கு வரும் சந்தானம் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கிறார் என்று தான் சொல்லனும் காமெடி மட்டும் இல்லாமல் காதல் என்றால் என்ன நட்பு என்றால் என்ன என்ற தத்துவத்தை அவரின் ஸ்டைலில் அருமையாக வெளிபடுத்தியுள்ளார். நிச்சயம் ஒரு சாபாஷ் போடணும்.

இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி விஜய் டிவி காமெடி நிகழ்ச்சி இயக்குனர் என்பதை நிருபித்துள்ளார் என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு படம் முழுக்க நகைசுவையில் மூழ்கடிக்க வைத்துள்ளார் அதே போல ஆபாசம் இல்லாமல் ரசிக்கும் படியான வசனங்கள் சில இடங்களில் கொஞ்சம் இரட்டை அர்த்தம் உள்ளது.

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு அழகாக இருக்கிறது. அதை படமாக்கியவிதமும் அருமை. ‘கண்ணாடி பூவுக்கு வண்ணமில்லை’ என்ற பாடலை படமாக்கிய விதம், அந்த பாடலை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா தனித்துவம் காண்பித்திருக்கிறது.

எனக்கு வாய்த்த அடிமைகள் காமெடிக்கு நாம் அடிமை )Rank 5/3

Leave a Reply