Sunday, June 21
Shadow

விக்ரம் வேதா நடிகருக்கு கை கொடுத்த கவுதம் மேனன்

கதிர் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் படம் ‘சத்ரு’. இந்தப் படத்தை ‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்’ சார்பில் ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த ‘லகுபரன்’ இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கும் படத்தின் பாடல்களை கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எழுதுகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ‘நவீன் நஞ்சுண்டான்’.

“இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதை. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருவதாக இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் கவுதம்மேனன் வெளியிட்டிருக்கிறார். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Leave a Reply