
‘கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தை தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக்
நடிகர் கௌதம் ராம் கார்த்திக், நடிப்புடன் பைக் ரைடிங்கிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ரைடிங்கை பொழுதுபோக்காக மட்டுமின்றி, அதில் உள்ள நுட்பங்களை முறையாகக் கற்றுக்கொண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தன்னை தயார்படுத்தி வருகிறார்.
திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் பைக் ஓட்டுதல் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் கௌதம், மோட்டார் சைக்கிள் பந்தயங்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். ஒவ்வொரு ரைடிங்கிலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதுடன், தனது பைக்கின் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆர்வத்தின் ஒரு பகுதியாக, தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து பைக் ரைடிங் தொடர்பான ஆவணப்பட வீடியோ ஒன்றையும் கௌதம் ராம் கார்த்திக் உருவாக்கியுள்ளார். இதில் அவரது நெருக்கமான பைக் ‘கோரா’ முக்கிய இடம் பெற்றுள்ளது.
கௌதம் மற்றும் அவரது நண்பர்களின் பைக் பயணம், அதற்கான தயாரிப்புகள், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்கள் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு ரைடருக்கும் அவரது பைக்கிற்கும் இடையே உருவாகும் நெருக்கம் மற்றும் பைக் ரைடிங்கின் மீதான அவரது ஆர்வம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
திரைப்படங்களில் நடிகராக அறியப்படும் கௌதம் ராம் கார்த்திக்கின் மற்றொரு ஆர்வத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் இந்த வீடியோ அமைந்துள்ளது. பைக் ரைடிங்கை தொடர்ந்து கற்றுக்கொண்டு, தன்னை ஒரு ரைடராக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
திரைப்படப் பணிகளுக்கு இடையே மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக நேரம் ஒதுக்கி வரும் கௌதம், தனது ரைடிங் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். அவரது இந்த புதிய பயணத்தின் தொடக்கத்தை ‘கோரா’ வீடியோ பதிவு செய்கிறது.
நட்பு, பைக் மீதான ஆர்வம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஈடுபாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ள இந்த வீடியோ, கௌதம் ராம் கார்த்திக்கின் புதிய பயணத்திற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
Gautham Ram Karthik Embarks on a New Journey in Motorsport with ‘Kora’
Actor Gautham Ram Karthik, who has a keen interest in sports and motorcycle riding, is exploring a new side of his passion beyond cinema. Over the past few months, motorcycle riding has become an important part of his routine, with the actor making the most of his free time between film shoots to ride and train.
For Gautham, riding is more than just a hobby. He has been taking a keen interest in understanding the technical aspects of motorcycles and is gradually preparing himself to explore motorsport more seriously. He also follows motorcycle racing closely and continues to learn from every riding experience.
Riding also gives the actor an opportunity to step away from the hectic schedules of film shoots and focus on something he is passionate about. Along with the physical challenges, Gautham sees riding as a way to push himself mentally while gaining a better understanding of his motorcycle and its performance.
As part of this journey, Gautham Ram Karthik, along with his close friends, has created a short documentary-style video centred around his passion for riding. His beloved motorcycle, ‘Kora’, takes centre stage in the video.
The video captures various moments from Gautham and his friends’ riding journey, including their preparations and training sessions. It also offers a glimpse into the bond between a rider and his motorcycle, while showcasing Gautham’s enthusiasm for riding.
Known primarily for his work as an actor, Gautham’s latest video gives fans a closer look at another side of his personality and interests. Rather than treating riding simply as a leisure activity, he is working towards learning it systematically and taking his skills to the next level.
Despite his busy film commitments, Gautham continues to set aside time for motorsport and is working on improving himself as a rider. The newly released ‘Kora’ video captures the beginning of this new journey.
Blending friendship, passion and a love for motorcycles, the video offers a glimpse into Gautham Ram Karthik’s growing involvement in the world of motorsport.
