Friday, October 9
Shadow

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நாயகனாக நடிக்கும் ‘பரீட்’ படத்தின் போஸ்டர் வெளியீடு – விரைவில் திரைக்கு வருகிறது!

ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சவால்களும், அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளும் சினிமாவில் இதுவரை பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியின் பணிச்சூழலையும், அவர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried).

ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ‘வெப்’ திரைப்படத்தை இயக்கிய ஹாரூண் எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, இப்படத்தில் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்சிதா நடித்துள்ளார்.

மேலும், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ புகழ் ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பணியின் அழுத்தமும் குடும்ப வாழ்க்கையின் தாக்கமும்!

என்கவுண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல் அதிகாரி ஒருவர் தனது பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், அவை அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள், அந்தச் சூழல்களில் இருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. விசாரணை சார்ந்த பரபரப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இப்படம், ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பேசும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவெடுத்துள்ளது.

தொழில்நுட்பக் குழுவினர்!

இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைத்துள்ளார். கே.வி. கிரண் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். டான் பாஸ்கோ படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய வேலு கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ரிச்சி ரிச்சர்ட்சன் நடன அமைப்பைக் கவனித்துள்ளார்.

மேலும், போலீஸ் பின்னணியில் உருவாகியுள்ள படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.

சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

முக்கிய பிரபலங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!

இந்நிலையில், ‘பரீட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். போஸ்டர் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ‘பரீட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Buried’ First Look Poster Unveiled by Producer S.R. Prabhu, Director S.R. Prabhakaran and Actor Aari Arjuna

‘8 Thottakkal’ Fame Vetri Plays an Encounter Specialist in the Investigation Thriller ‘Buried’; Film Set for Theatrical Release Soon

Films exploring the challenges faced by police officers and the impact of their demanding profession on family life have always offered compelling narratives. Taking this theme forward, Buried, an upcoming investigation thriller, revolves around the professional challenges and personal struggles of an encounter specialist police officer.

Produced by Dream House and Jain Creations, the film is written and directed by Haroon, who previously directed Web. Actor Vetri, known for his performance in 8 Thottakkal, plays the lead role of an encounter specialist police officer. Akshitha, who hails from Hyderabad, plays the female lead.

The film also features Chandini Tamilarasan, Balaji Sakthivel, Singampuli, Saravanan Subbiah, Jensen Dhivakar of Lubber Pandhu fame, Kodangi Vadivelu and others in important roles.

A Police Officer’s Professional Challenges and Personal Struggles

Buried explores the demanding world of an encounter specialist and the challenges he faces in the line of duty. The story also focuses on how the pressures of his profession affect his family life and how he attempts to overcome the difficulties arising from these circumstances.

Blending investigative elements with suspense and thrilling developments, the film presents the lesser-seen personal side of a police officer’s life.

Technical Crew

John Robins has composed the music for the film, while K.V. Kiran is in charge of cinematography. Don Bosco handles the editing, and Velu, who has worked on films including Kantara, oversees the art direction. Richie Richardson has choreographed the dance sequences.

Director and actor Arunraja Kamaraj has lent his voice to an important song in the film, which is centred on the police backdrop.

The film was shot across several locations, including Chennai, Coimbatore, Yercaud and Kodaikanal.

First Look Poster Unveiled by Prominent Industry Personalities

The first-look poster of Buried has been unveiled by producer S.R. Prabhu, director S.R. Prabhakaran and actor Aari Arjuna.

With the first-look poster now out, the film has generated interest among moviegoers. The post-production work has been completed, and the makers are preparing to bring the film to theatres soon.

The official theatrical release date is expected to be announced in due course.