Tuesday, November 17
Shadow

“எனக்கு வீடு என்பது ஒரு இடம் அல்ல… என்னுடன் இருக்கும் மனிதர்கள்தான்!” – சிக்மா பட  விழாவில் நடிகை பரிதா அப்துல்லா நெகிழ்ச்சி

“எனக்கு வீடு என்பது ஒரு இடம் அல்ல… என்னுடன் இருக்கும் மனிதர்கள்தான்!” – சிக்மா பட  விழாவில் நடிகை பரிதா அப்துல்லா நெகிழ்ச்சி

‘சிக்மா’ திரைப்பட விழாவில் பேசிய நடிகை பரிதா அப்துல்லா, படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் தனக்குள் இருக்கும் பதற்றத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

ஹைதராபாத்தில் பிறந்த தன்னுடைய பயணம், தமிழ் திரையுலகில் தனக்கு கிடைத்த வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “இன்னும் இரண்டு நாட்களில் படம் வெளியாக இருக்கிறது. அதனால் உற்சாகமாகவும், சற்று பதற்றமாகவும் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள் மிகவும் இயல்பாகவும் சரளமாகவும் பேசுவதைப் பாராட்டிய பரிதா, மொழி தொடர்பான சவால் இருப்பதால் தான் பேசும்போது சற்று கவனமாக இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது வெற்றிப் பயணத்தின் பின்னணியில் இருக்கும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க அவர் தவறவில்லை. தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், தனது அம்மா, அப்பா, குடும்பத்தினர் மற்றும் தன்னுடன் தொடர்ந்து பயணிக்கும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

“என்னை முழுமையாக்கும் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று கூறிய பரிதா, ‘வீடு’ என்ற வார்த்தைக்கு தனக்கான அர்த்தத்தையும் அழகாகப் பகிர்ந்துகொண்டார்.

“என்னைப் பொறுத்தவரை வீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது. நான் யாருடன் இருக்கிறேனோ, அந்த மனிதர்கள்தான் எனக்கு வீடு. நான் பயணம் செய்யும் இடமெல்லாம் என் வீட்டையும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்” என்ற அவரது வார்த்தைகள் விழாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

தமிழ் திரையுலகில் தனக்கு குடும்பம் போன்ற உணர்வை வழங்கிய லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். தமிழ்ச் சார், சுபாஸ்கரன் சார் மற்றும் சஞ்சய் உள்ளிட்ட படக்குழுவினரின் அன்பையும் ஆதரவையும் குறிப்பிட்டு, தன்னை அவர்களில் ஒருவராகவே உணர வைத்ததற்கு நன்றி கூறினார்.

‘சிக்மா’ படக்குழுவினரைப் பாராட்டிய பரிதா அப்துல்லா, சண்டீப்பிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்தப் படம் அனைவருக்கும் சிறப்பான அனுபவத்தைத் தரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று ‘சிக்மா’ படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய உரையின் இறுதியில், நிகழ்வில் குறிப்பிடத் தவறிய அனைவரிடமும் அன்புடன் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பரிதா, “உங்கள் அனைவரின் மீதும் எனக்கு நிறைய அன்பு இருக்கிறது” என்று கூறி, படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

Oplus_131072

“Home Is Not a Place, It Is the People I Am With” – Paritha Abdullah Gets Emotional at Sigma Event

Actress Paritha Abdullah opened up about her journey, her excitement ahead of the release of Sigma, and the love and support she has received from her family and the Tamil film industry at the film’s event.

Born in Hyderabad, Paritha said that she was experiencing a mix of excitement and nervousness as the film is set to hit theatres in just two days.

Sharing her thoughts about working with the team, the actress appreciated her co-stars and colleagues for the way they express themselves naturally and fluently. She also spoke about the language barrier she faces while communicating in Tamil, adding that it sometimes makes her more careful while speaking at public events.

Paritha did not miss the opportunity to acknowledge the people who have been the foundation of her journey. She expressed her heartfelt gratitude to her parents and family, crediting their constant support for helping her remain strong, happy, peaceful and creative.

She also thanked the members of her team and everyone who has been a part of her personal and professional journey.

One of the most heartfelt moments of her speech came when she spoke about what the word ‘home’ means to her.

“Home is not a particular place for me. The people I am with are my home. Wherever I travel, I carry my home with me,” she said, highlighting the importance of the people around her.

The actress also expressed her gratitude to Lyca Productions for making her feel at home in the South Indian film industry. She thanked Tamil, Subaskaran and Sanjay for welcoming her warmly and making her feel like one of their own.

Addressing Sandeep, Paritha expressed her pride and excitement about Sigma and extended her best wishes to the entire team.

With the film gearing up for its theatrical release in two days, the actress urged audiences to watch Sigma in theatres and assured them that the film would offer an enjoyable experience.

Concluding her speech on an emotional note, Paritha thanked the entire team and everyone who had supported her throughout the journey. She also apologised affectionately to anyone she may have missed mentioning, reiterating that she holds immense love and gratitude for everyone associated with the film.

Sigma is set to release shortly, with the team looking forward to meeting audiences in theatres.