
தமிழ்–தெலுங்கு காமெடிக்கு புதிய கூட்டணி… யோகி பாபு – சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’!
‘ரங்கபலி’ புகழ் பவன் பாசம்செட்டி இயக்கத்தில் உருவாகும் ‘Telumil’ திரைப்படம் – டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் நகைச்சுவை நட்சத்திரங்களான யோகி பாபு மற்றும் சத்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கோல்டன் பாக்கியம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘ரங்கபலி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பவன் பாசம்செட்டி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dream Movie Makers மற்றும் Nayavayu Chitralu நிறுவனங்களின் சார்பில் நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இது முதல் தயாரிப்பு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்–தெலுங்கை இணைக்கும் ‘Telumil’ முயற்சி
‘கோல்டன் பாக்கியம்’ ஒரு வழக்கமான தமிழ் அல்லது தெலுங்கு திரைப்படமாக இல்லாமல், இரு மொழிகளையும் சேர்ந்த கதைக்களம் மற்றும் கலைஞர்களை ஒரே திரையில் இணைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படக்குழு இதனை ‘Telumil’ என குறிப்பிடுகிறது.
வெளியாகியுள்ள கிளிம்ப்ஸும் இந்த வித்தியாசமான அணுகுமுறையை நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்துகிறது. ஒரு பக்கம் தெலுங்கு கதாபாத்திரம் பிரியாணி மற்றும் கூல் டிரிங்கை ரசித்து, தங்களது உணவுதான் சிறந்தது எனப் பெருமை பேச, மறுபுறம் தமிழ் கதாபாத்திரம் இட்லி–சாம்பாரை ரசித்தபடி அதற்கு இணையான உணவு வேறு எதுவும் இல்லை எனக் கூறுகிறது.
இருவருக்கும் இடையே நடைபெறும் இந்த வேடிக்கையான வாக்குவாதத்தின் நடுவே, “இவர்களைவிட பெரிய காம்பினேஷன் ஒன்று வரப்போகிறது” என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சி நகர்கிறது.
யோகி பாபு – சத்யா காமெடி கூட்டணி
அதனைத் தொடர்ந்து யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் இடம்பெறுகிறது. இருவரும் வெள்ளை நிற உடையில் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
குறிப்பாக, தமிழ் நடிகரான யோகி பாபு தெலுங்கிலும், தெலுங்கு நடிகரான சத்யா தமிழிலும் பேசும் காட்சிகள் இந்தப் படத்தின் மொழி சார்ந்த நகைச்சுவைக்கு முக்கிய பலமாக அமையும் என்பதை கிளிம்ப்ஸ் உணர்த்துகிறது.
இவர்களின் கதையைப் பற்றி இயக்குநர் பவன் பாசம்செட்டி அளிக்கும் அறிமுகத்தில், காதல், கிரைம் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்த கதையாக ‘கோல்டன் பாக்கியம்’ உருவாகியிருப்பது தெரிய வருகிறது.
கிளிம்ப்ஸின் பின்னணியில் இடம்பெறும் பிரம்மாண்டமான மல்டி-ஸ்டார் கட்அவுட்களும், யோகி பாபு–சத்யா கூட்டணியை ஒரு வித்தியாசமான தமிழ்–தெலுங்கு காம்பினேஷனாக முன்னிறுத்துகின்றன.
நகைச்சுவைக்கு துணை நிற்கும் நட்சத்திர பட்டாளம்
யோகி பாபு மற்றும் சத்யாவுடன் ஜெயஸ்ரீ, அதிராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் வென்னெல கிஷோர், சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி, தனிகெள்ளா பரணி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.
யோகி பாபுவின் தனித்துவமான காமெடி பாணியும், சத்யாவின் நகைச்சுவை டைமிங்கும் ஒரே படத்தில் இணைவதால், இருவரையும் மையப்படுத்திய காமெடி காட்சிகள் படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான தொழில்நுட்பக் குழு
படத்திற்கு பவன் பாசம்செட்டி கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி தயாரிக்கின்றனர்.
பவன் CH மற்றும் நிதிஷ் ஜான் இசையமைக்க, மலையாளத் திரையுலகில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர் பப்லு அஜு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பையும், சிவா காமேஷ் D கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.
படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பிலும் படக்குழு தங்களது நகைச்சுவை பாணியை தொடர்ந்துள்ளது. முதலில் சங்கராந்தி வெளியீடாக அறிவிக்கப்பட்ட ‘கோல்டன் பாக்கியம்’, பின்னர் அந்த வெளியீட்டுத் திட்டத்திலிருந்து விலகி, இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்–தெலுங்கு திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களை ஒரே கதையில் இணைத்து உருவாகும் இந்த புதிய ‘Telumil’ முயற்சி, யோகி பாபு – சத்யா கூட்டணியின் திரை கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்ட வித்தியாசமான காமெடி என்டர்டெய்னராக உருவாகி வருகிறது.
Yogi Babu and Satya Team Up for ‘Golden Bhagyam’; Title Glimpse Unveils a Unique Telugu-Tamil ‘Telumil’ Entertainer
Rangabali fame Pawan Basamsetti directs the comedy entertainer, blending humour, love, crime and action
Tamil and Telugu cinema’s popular comedy actors Yogi Babu and Satya are coming together for the first time for an exciting new entertainer titled ‘Golden Bhagyam’. The film is directed by Rangabali fame filmmaker Pawan Basamsetti, and the title glimpse has now been unveiled, offering a glimpse into the film’s distinctive concept and comic world.
The film is jointly produced by Nagarjuna Reddy and Pawan Basamsetti under the banners of Dream Movie Makers and Nayavayu Chitralu. The project marks the maiden production venture of both banners.
A Telugu-Tamil ‘Telumil’ Combination
‘Golden Bhagyam’ is not positioned as a conventional Tamil or Telugu film. Instead, the makers describe it as a ‘Telumil’ project, bringing together the languages, cultures and popular performers of both industries.
The title glimpse introduces this concept with a humorous sequence involving a Telugu man and a Tamil man passionately defending their favourite cuisines. While the Telugu character enjoys biryani with a cool drink, the Tamil character relishes idli with sambar. Their playful argument over which cuisine is superior takes an unexpected turn when another person hints that an even more exciting combination is about to arrive.
The sequence then leads to the stylish introduction of Yogi Babu and Satya, who appear in traditional white attire. The glimpse further hints that their story will combine love, crime and action, before revealing the title ‘Golden Bhagyam’.
Yogi Babu and Satya Bring Their Comic Styles Together
One of the major highlights of the project is the unusual pairing of two leading comedy actors from different industries. Adding to the fun, Satya, a Telugu actor, is seen speaking Tamil, while Tamil star Yogi Babu speaks Telugu in the glimpse.
The makers have also presented the duo as a major Tamil-Telugu combination, with massive multi-starrer cutouts appearing in the background. The glimpse suggests that the film will be built around the distinctive chemistry and comic timing of its lead actors.
Yogi Babu and Satya are expected to form the film’s central comic force, bringing their respective styles of humour together in a setting that connects the Tamil and Telugu film industries.
Prominent Supporting Cast
Jayashree and Athiraj play the female leads, while Vennela Kishore, Sudharshan, Kishore Tirumala, Rohini, Tanikella Bharani and Sunil Reddy are part of the prominent supporting cast.
The technical team includes an experienced group of filmmakers and technicians. Pawan Basamsetti has written and directed the film, while Nagarjuna Reddy and Pawan Basamsetti are producing it.
Pawan CH and Nitish John are composing the music, with cinematography handled by Bablu Aju. Raviteja Girijala is responsible for the editing, while Siva Kamesh D takes care of production design. Yuvraaj is the PRO.
The makers have also added a humorous touch to the film’s release announcement. The movie was initially announced as a Sankranthi release, but the plans were subsequently changed, with the team now confirming that ‘Golden Bhagyam’ will arrive within this year.
With its unusual Tamil-Telugu combination, two popular comedy stars at the forefront and a storyline that blends comedy, romance, crime and action, ‘Golden Bhagyam’ promises to be a distinctive crossover entertainer.
Cast: Yogi Babu, Satya, Jayashree, Athiraj, Vennela Kishore, Sudharshan, Kishore Tirumala, Rohini, Tanikella Bharani and Sunil Reddy
Technical Crew:
Writer & Director: Pawan Basamsetti
Producers: Nagarjuna Reddy & Pawan Basamsetti
Banners: Dream Movie Makers, Nayavayu Chitralu
Music: Pawan CH, Nitish John
DOP: Bablu Aju
Editor: Raviteja Girijala
Production Design: Siva Kamesh D
PRO: Yuvraaj
