
கோலிவுட், டோலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்து பாலிவுட் ஆசையில் சென்ற பல தென்னிந்திய ஹீரோயின்கள் ஒன்றிரண்டு படங்களோடு மூட்டை கட்டிக்கொண்டு திரும்பினர். ஒன்றிரண்டு நடிகைகள் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடித்து வருகின்றனர். இவர்களைப் போலவே தென்னிந்திய பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து பாலிவுட் சென்றார் இலியானா. ரன்பீர் கபூருடன் ஜோடியாக நடித்த பர்பி இந்தி படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வருமென்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 5 வருடங்கள் ஆகியும் 5 படங்கள் மட்டுமே இந்தியில் நடித்திருக்கிறார்.
கைநிறைய வாய்ப்புகள் பெற பாலிவுட் ஹீரோயின்கள் பயன்படுத்தும் டெக்னிக்குகளை பயன்படுத்தினார். பாய்பிரண்டுடன் டேட்டிங், செக்ஸ் பற்றி வெளிப்படையான கருத்து, நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிடுவது என தன்னை டிரெண்டிலேயே வைத்திருக்க முயற்சித்து வருகிறார். இதெல்லாம் அவரைபற்றி பரபரப்பாக பேச வைத்ததே தவிர வாய்ப்பு மழை கொட்டுவதற்கான பலனை தரவில்லை. மனம் நொந்த இலியானா மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க முயன்றார்.
இதற்கிடையில் வெவ்வேறு இளம் ஹீரோயின்கள் தென்னிந்திய படங்களில் பிரபலமாகி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்த படங்களாக வெளியிட்டு வந்த நிலையில் உச்சகட்ட முயற்சியாக நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘பாத்ரூம் டப்’பில் நிர்வாணமாக படுத்திருப்பதுபோன்ற அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதை வைத்து ஒரு பட வாய்ப்பும் இப்பvவந்துள்ளது விஜய் நடித்த கத்தி படத்தை ஹிந்தியில் ரீமேக் பண்ண இருகிறார்கள் இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் நம்ம தமன்னா நாயகியாக நடிக்க இருந்த வாய்ப்பை இப்ப இலியான தட்டி பறித்துவிட்டார் அம்மிணி தமன்னா செம மூட் அவுட் பாருங்க என்ன ஒரு ட்ரிக் இலியானா வா கொக்கா