Friday, August 14
Shadow

Tag: jayamravi

டிக் டிக் டிக் படத்தை மக்கள் முதலில் ஏற்க தயங்குவார்கள் – ஜெயம் ரவி!

டிக் டிக் டிக் படத்தை மக்கள் முதலில் ஏற்க தயங்குவார்கள் – ஜெயம் ரவி!

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் ஷக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ளது டிக் டிக் டிக். ஆசியாவின் முதல் விண்வெளி படம் என்ற பெருமையையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஜெயம் ரவி, ‘ முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். அதே போல் தான் இப்படத்தையும் முதலில் மக்கள் ஏற்க கொஞ்சம் தயங்குவார்கள். நமது உழைப்பாளிகளை வைத்தே இப்படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கியிருக்கிறோம். நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ...
புதிய மைல்கல்லை தொட்ட இசையமைப்பாளர் டி.இமான்

புதிய மைல்கல்லை தொட்ட இசையமைப்பாளர் டி.இமான்

Latest News, Top Highlights
சின்னத்திரை சீரியல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இதை தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களுக்கு இசையமைத்து வந்தார். விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து `விசில்', `6'2' `ரெண்டு' என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இமான், `மைனா' படத்தின் மூலம் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார். `மைனா' படத்திற்கு பின்னர் அவரது இசையில் வெளியான பெரும்பாலான படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இமான் 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படம் தான் இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்ட இமானுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ...
கார்த்திக் தங்கவேலு உடன் `அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி

கார்த்திக் தங்கவேலு உடன் `அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி

Latest News, Top Highlights
உலக அளவில் மீடியா துறையில், சின்னத்திரை தயாரிப்பிலிருந்து, சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளனர். அவர்களது முதல் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என பல தரப்பட்ட படங்களிலும் கலக்கி முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரண், மிஸ்கின் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்த படத்திற்கு `அடங்க மறு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படம் குறித்து, `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் உ...
ஜெயம் ரவியின் 24-வது படத்தின் முக்கிய அறிவிப்பு

ஜெயம் ரவியின் 24-வது படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையில் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு நாளை (டிசம்பர் 14) நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியாக இருக்கிறது சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்....
மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”

மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”

Latest News
பரத், பிரேம்ஜி, ரமண, பானு மெஹர, சுவாதி டிக்சித் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ,கேசவன் ஸ்வேதா அசோக் மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் சின்னு சித்தார்த் ஒளிப்பதிவில் வினோத் ராஜ்குமார் மற்றும் ஆண்டனி கலை இயக்கத்தில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சிம்பா இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது . இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஷால் மிஷ்கின் வெங்கட் பிரபு இயக்குனர் காந்தி கிருஷ்ணா ,ஜெயம்ரவி, தன்சிகா , ப்ருதிவ் பாண்டியராஜ்,அரவிந்த் ஆகாஷ் , பிரசன்னா மற்றும் சினேகா பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் ட்ரைலர் மற்றும் நான்கு பாடல்கள் திரையிட்டனர். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லபடாத கதை என்று சொல்லலாம் ஏன் யாரும் முயற்சி செய்யாத கதை என்றும் சொல்லலாம் ஸ்டோனர் கதை என்று சொல்லுவார்கள...