Monday, January 17
Shadow

‘இப்படை வெல்லும்’ இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மஞ்சிமா மோகன்

உதயநிதி திழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் அதுக்கு முக்கிய காரணம் அவரின் கதை தேடல் என்று சொல்லாலம் தனக்கு என்ன வரும் என்று புரிந்து கொண்டு அதுக்கு தேவையான கதைகளை மட்டு தேர்வு செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லனும் அப்படி ஒரு தேடல் தான் விரைவில் வர இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’ இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர்.

சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தை அடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை கவுரவ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி, மஞ்சிமா மோகன், இயக்குனர் கவுரவ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குனர்கள் திரு, அறிவழகன், ஏ.எல்.விஜய், லைகா புரொடக்‌ஷன் ராஜுமகாலிங்கம், தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு, இப்படத்தை பாடல்களை வெளியிட்டார்.

இவ்விழாவிற்கு முன்னதாக இமான் இசையில் உருவான பாடல்களுக்கு நடனக் குழுவினர் நடனம் ஆடினார்கள். நடிகை மஞ்சிமா மோகன் மேடைக்கு வந்த போது, ரசிகர்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இதை பார்த்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் திகைத்தனர்.

Leave a Reply

CLOSE
CLOSE