
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். அந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கினார். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியாகிய இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்களை கடந்து புதிய மைல்கல்லையும் தொட்டது. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விஜய்யுடன் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், அட்லி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் பிரபாஸ் நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில், அடுத்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அட்லிக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது இந்த செய்தி வதந்தி என்பது தெரியவந்தது. அட்லி தனது புதிய படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக இருப்பதாகவும், ஹீரோ யார் என்பது இன்னுமும் முடிவாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
