Monday, June 22
Shadow

Tag: #நடிகை ஸ்ரீதேவி

வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்

வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்

Latest News, Top Highlights
நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீதேவி மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். ஒருவரது வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாக தெரியும். ஆனால் அதன் மறுமுகம் வேதனையாக கூட இருக்கலாம். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அதற்கு உதாரணம். ஸ்ரீதேவி ஒரு கூண்டுக்கிளி போன்று சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தார். தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயத்தை ஏற்படுத்தின. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை. கேமிராவுக்கு முன்பு நடிக்கும் போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்தார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர். அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல...
இதனால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தாரா? வேகமாய் பரவும் தகவல்கள்

இதனால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தாரா? வேகமாய் பரவும் தகவல்கள்

Latest News, Top Highlights
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (53) மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். குறைந்த ரத்த அழுத்தத்தால், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை இன்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், துபாயின் பிரபல ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன. நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படு...