
காபி வித் காதல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
காபி வித் காதல் திரைப்படம் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியைப் பற்றியது. மூத்த மகன், தன் தந்தையைப் போல இருக்க விரும்புகிறான், மிகவும் பொறுப்பானவன். மேலும் இரண்டு மகன்களும் கட்டுப்பாடற்றவர்கள். மீதிப் படம் அவர்களது குடும்பத்தின் திருப்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது
நடிகர் ஜெய் மாளவிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்வார், ஆனால் அவர் அமிர்தா ஐயரை காதலிப்பதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், ஜீவா மாளவிகா சர்மாவை காதலிக்கிறார். இது ஒரு முக்கோண காதல் கதை. யோகி பாபு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருப்பார். யாருடைய காதல் வெற்றி பெறும்? கலப்பு ஜோடிகளுக்கு என்ன நடக்கும்? இவற்றுக்கான விடைகள்தான் மீதிக்கதை.
படத்தின் பிளஸ்:
ஜீவாவின் நடிப்பு, யுவனின் இசை, நகைச்சுவை காட்சிகள்
படத்தின் மைன்ஸ்:
நீளமான திரைக்கதை
மொத்தத்தில் காபி வித் காதல் ஒரு முறை பார்க்கலாம்....