
ஹைதராபாத் ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் தனக்கென்று வடிவமைக்கப்பட்ட மெழுகு சிலையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று திறந்து வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவர், தமிழில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மஹரிஷி என்ற படத்திலும், எஸ்.எஸ்.எம்.பி26 என்ற படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தனது மெழுகு சிலையை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபிவின் மனைவி நம்ரோதா ஷிரோத்கர், மகள் சித்தாரா கத்தாமனேனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.