Wednesday, October 28
Shadow

அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது!

அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது!

மதுரை மண்ணின் மண்வாசனையுடன் குடும்ப உணர்வுகளைப் பேசும் புதிய படம்!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குடும்ப உறவுகள், அப்பா – மகன் இடையேயான பாசம், மனிதர்களின் உணர்வுகள் என வாழ்வின் நெருக்கமான தருணங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால், கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும் மண்ணின் மணத்தையும் திரையில் பதிவு செய்யும் படைப்பாக ‘தகப்பன்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பின்போது மதுரையில் படத்தின் சில காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுப் படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு, முழுமையான கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘TTT’ திரைப்படத்தைத் தொடர்ந்து, மதுரை மண்ணின் பின்னணியில் அமைந்த உணர்வுபூர்வமான கதையில் ஜீவா நடித்திருப்பது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்டு, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசும் படமாக இது அமையும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப இசை அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

படத்தை K. குமார் தயாரிக்கிறார். M. சுகுமார் ஒளிப்பதிவையும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளார். ஆடைப் பொறுப்பை M. செல்வராஜும், ஆடை வடிவமைப்பை ரிதேஷ் செல்வராஜும் மேற்கொள்கின்றனர். T. உதய் குமார் ஒலிப்பதிவுப் பணியையும், தேனி அன்பு புகைப்படப் பணியையும் கவனித்துள்ளனர்.

R. பாலகுமார் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், பிரிதிவிராஜா சின்னசாமி விநியோகத் தலைவராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளையும், தினேஷ் அசோக் விளம்பர வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர்.

படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே, படத்தின் சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘தகப்பன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குடும்பப் பாசத்தையும் தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

Jiiva’s ‘Thagappan’ to Hit Theatres Worldwide on December 24!

A Heartfelt Family Drama Set Against the Rustic Backdrop of Madurai

Actor Jiiva’s upcoming film Thagappan, directed by Ra. Venkat and produced under the Lark Studios banner, is all set to release in theatres worldwide on December 24. The makers officially announced the release date with an impressive new poster, raising expectations among audiences.

Set against the backdrop of Madurai and its surrounding regions, Thagappan revolves around the bond between a father and son, family affection, and the many emotions that shape human relationships. With its rural setting and rooted storytelling, the film is expected to capture the authentic flavour of village life and the cultural essence of Madurai.

Reports suggest that members of the public who witnessed certain scenes during the film’s shoot in Madurai were moved by what they saw and appreciated the team. This has further heightened curiosity and anticipation surrounding the film.

Following Thenavattu, Thagappan marks Jiiva’s return to a film set entirely against a rural backdrop. After the success of his recent film TTT, the actor’s decision to take on a story steeped in the culture and traditions of Madurai has attracted considerable attention from fans. The makers are confident that the film will stand out as a distinctive addition to Jiiva’s filmography.

Rajisha Vijayan plays the female lead in the film. The music is composed by independent musician Marshall Robinson, who has experience working with leading composers, including Anirudh. His score is expected to complement the emotional depth of the narrative.

K. Kumar serves as the producer, with M. Sukumar handling cinematography. Nagooran Ramachandran is in charge of editing, while K.B. Nandhapalan oversees art direction. Mahesh Mathew choreographs the action sequences. M. Selvaraj is responsible for costume supervision, while Rithesh Selvaraj handles costume design. T. Uday Kumar takes care of sound recording, and Theni Anbu is the still photographer.

R. Balakumar serves as the executive producer, while Prithviraja Chinnasamy is the distribution head. Yuvraaj handles public relations, and Dinesh Ashok is responsible for publicity design.

Think Music has acquired the audio rights to the film. In another significant development, Zee Tamil has secured the satellite rights, while ZEE5 has acquired the digital streaming rights even before the film’s production was completed.

With the release date now officially announced, the team is actively working on the final stages of production. Blending family relationships, emotional storytelling, and the rustic charm of Madurai, Thagappan is gearing up for its worldwide theatrical release on December 24.