Wednesday, March 26
Shadow

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி எப்போ வருவார் என்று அழுது புலம்பும் ஜூலி குடும்பம்

பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் இன்றுவரை… பல கோணங்களில் அந்நிகழ்ச்சியைப் பற்றி ரசிகர்கள் போடும் மீம்ஸ், போஸ்டுகளால் சமூக வலைதளம் அதகளப்படுகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை அநேகம்பேரால் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை ஜூலி. பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் முதல் ஆளாக, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார். அடுத்து, வாக்கெடுப்பின் அடிப்படையில் அனுயா வெளியேறினார். பரணி மற்றும் கஞ்சா கருப்பு இடையே வாக்குவாதம் வந்துபோயின.

மூன்றாவது ஆளாக கஞ்சா கருப்பு, வாக்கெடுப்பின்படி வெளியேற்றப்பட்டார். ‘பிக் பாஸ்’ வீட்டுச் சுவர் ஏறித் தப்பிக்க முயன்றார் பரணி. நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக, நான்காவதாக அவர் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பரணியின் வெளியேற்றம் யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. அடுத்த எலிமினேஷனுக்கு ஓவியா, ஆர்த்தி, ஜூலி, வையாபுரி போன்றோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். ஆர்த்தியும் ஜூலியும் தங்கள் உடைமைகளை பேக் செய்து வெளியேற்றப்படும் தருணத்தில், மீண்டும் இருவரையும் உள்ளே அழைத்து, ஆர்த்தி எலிமினேட் செய்யப்பட்டு, ஜூலி காப்பாற்றப்பட்டார்.

ஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் கோபப்படுவது, அழுவது என எமோஷனல் கேரக்டராக அறியப்பட்டார் ஜூலி. அவரை நர்ஸ் எனக் கிண்டல் செய்வதும், வி.ஜே ஆகப் போகிறார் அதன் காரணமாகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் எனவும், இயல்பாக இல்லாமல் நடிக்கிறார்; பேச்சில் உண்மை இல்லை, ஃபேக்காக இருக்கிறார்’ என ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்த அனைவரும் அவரைச் சீண்டினார்கள். அந்நிலையிலும் பரணி, கணேஷ் வெங்கட்ராம் போன்றோர் ஜூலிக்கு ஆதவாக இருந்தார்கள். ‘உன்னை எதிர்ப்பவர்களை திருப்பி அடி’ என்ற பரணி, ஒரு கட்டத்தில் எல்லோராலும் ஒதுக்கப்பட்டபோது, ஜூலி அவரிடம் ஆறுதலாககூட பேச வரவில்லை என்கிற அதிர்ச்சியை வலைதளத்தில் ரசிகர்கள் காண்பிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகான ஜூலியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அத்துமீறி செல்வதாக இருந்ததாக பலர் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தார்கள். பாசமாக ‘அண்ணா’ என்று பரணியை அழைத்த ஜூலியிடம் ‘யார் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருக்க வேண்டுமென கமல் கேட்டபோது பட்டென ‘கஞ்சா கருப்பு’ என பதில் தந்து பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பரணியிடம், கமல் ஜூலி பற்றி கேட்டபோது ‘நல்லாப் பேசிக்கொண்டிருந்த தங்கச்சி, கல்யாணமாகிப்போன இடத்தில் வேற மாதிரி பேசுவாங்க. அப்படி ஒரு தங்கச்சியாகத்தான் ஜூலியைப் பார்க்கிறேன்’ என்றார் டீசன்டாக. தான் வெற்றிபெற உள்ளே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருக்கிறார் என ஜூலிக்கு ஆதரவாக ஒருபக்கம் போஸ்டுகள் குவிய, மறுபக்கமோ சந்தர்ப்பவாதி என்கிற ரீதியில் சமூக வலைதளத்தில் கமெண்டுகள் பறந்தன.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஜூலிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலர்… பிறகு ஏன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டப்பின்னர் ஜூலியை இத்தனை கேலி செய்கிறார்கள்… என்ன காரணமாக இருக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள ஜூலியின் தம்பி ஜோஷ்வாவிடம் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தொடர்பு கொண்டோம்.

பலர்… பிறகு ஏன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டப்பின்னர் ஜூலியை இத்தனை கேலி செய்கிறார்கள்… என்ன காரணமாக இருக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள ஜூலியின் தம்பி ஜோஷ்வாவிடம் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தொடர்பு கொண்டோம்.

Leave a Reply