Wednesday, February 12
Shadow

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் ரசிகர்களின் கருத்து என்ன?

கமல் வருகிற 21-ந்தேதி கட்சி தொடங்குகிறார். சுற்றுப்பயணமும் செல்ல இருக்கிறார். அரசியல் நிலவரம் குறித்து தனது கருத்துக்களை உடனடியாக தெரிவித்து வருகிறார். பஸ் கட்டண உயர்வு உள்பட பல்வேறு தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு கமல் உறுதியான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டு அரசியலை சுத்தப்படுத்துவதுதான் எனது முதல் கடமை என்று அறிவித்து இருக்கிறார்.

ஆனால், ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த பிறகு அரசியல் பிரச்சினைகள் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஆனால் கமல் ரசிகர்களிடம் கருத்து கேட்டுதான் எந்தவித முடிவும் எடுக்கிறார். கமல் நேரடியாக மக்களை சந்திக்க களம் இறங்கி விட்டார். கமல் எந்தவித பாகுபாடும் இல்லாமல் தமிழக மக்களை நேசிக்க கூடியவர்.

ஒரு சார்பினர் விரும்பும் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடாது. ரஜினியை விட கமலுக்குதான் மக்கள் பலம் அதிகம் என்பது விரைவில் நிரூபணம் ஆகும். கமலின் புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. இதில் மக்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகிறார்கள்.

மற்றபடி கமலுக்குதான் மக்கள் ஆதரவு அதிகம் என்பதே உண்மையான நிலவரம் என்று கமல் ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.

Leave a Reply