Monday, May 18
Shadow

Tag: #RajinikanthPoliticalEntry

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் ரசிகர்களின் கருத்து என்ன?

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் ரசிகர்களின் கருத்து என்ன?

Latest News, Top Highlights
கமல் வருகிற 21-ந்தேதி கட்சி தொடங்குகிறார். சுற்றுப்பயணமும் செல்ல இருக்கிறார். அரசியல் நிலவரம் குறித்து தனது கருத்துக்களை உடனடியாக தெரிவித்து வருகிறார். பஸ் கட்டண உயர்வு உள்பட பல்வேறு தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு கமல் உறுதியான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டு அரசியலை சுத்தப்படுத்துவதுதான் எனது முதல் கடமை என்று அறிவித்து இருக்கிறார். ஆனால், ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த பிறகு அரசியல் பிரச்சினைகள் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஆனால் கமல் ரசிகர்களிடம் கருத்து கேட்டுதான் எந்தவித முடிவும் எடுக்கிறார். கமல் நேரடியாக மக்களை சந்திக்க களம் இறங்கி விட்டார். கமல் எந்தவித பாகுபாடும் இல்லாமல் தமிழக மக்களை நேசிக்க கூடியவர். ஒரு சார்பினர் விரும்பும் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடாது. ரஜினியை விட கமலுக்குதான் மக்கள் பலம் அதிகம் என...
ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் `2.0' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். விரைவில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பின் போது, `காலா' படத்திற்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார...
ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

Latest News, Top Highlights
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளின் போது நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றார். வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற பெயரில் இணையதள பக்கத்தை தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் ஆதரவு அளிக்கும்படி தெரிவித்திருந்தார். மேலும் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் ரஜினி பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் ரசிகர் மன்றங்களை இணைக்கவும், ஆட்சேர்ப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் இந்த தொடர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சினிமா து...
ஆன்மீக அரசியல் – ரஜினிகாந்த் விளக்கம்

ஆன்மீக அரசியல் – ரஜினிகாந்த் விளக்கம்

Latest News, Top Highlights
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று பல ஆண்டுகளாக, பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக, தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதியென்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார். மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதில் குறிப்பாக ஆன்மிக அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மேலும் ரஜினியை பாரதிய ஜனதா கட்சி பின்னிருந்து இயக்குவதாக பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில், ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார். உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது தான் ஆன்மீக ...
அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் முதல் ட்வீட்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் முதல் ட்வீட்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று குழம்பிப் போயிருந்த பலரது கேள்விக்கும் இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று விடை கிடைத்திருக்கிறது. மேலும் ரஜினியின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன் பாபு உள்ளிட்ட பலரும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரஜினி அவரது டுவிட்டர் பக்கத்தில் என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...
சொன்னதை செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ராஜினாமா – ரஜினிகாந்த்

சொன்னதை செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ராஜினாமா – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
தமிழக அரசியலில் களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக, தனக்கே உரிய ஸ்டைலில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தமிழக அரசியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவை அறிவித்துள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி, கொள்கை, தனது தாரக மந்திரம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் அரசியல் அறிவிப்பை அறிவித்த ரஜினிகாந்த் பேசியதாவது:- என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு, எதையும் செய்ய முயற்சிக்காதது எனக்கு குற்ற உணர்வு சாகும் வரை இருக்கும். அரசியல் ரொம்ப கெட்டு போயுள்ளதால் அனைத்தையும் மாற்ற வேண்டும் எல்லாவற்றையம் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஆன்மிக வழியில் அரசியலை கொண்டு வர வேண்டும். ஜனநாயகம் சீர்கெட்டு போயுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் நம்மை தலை குனிய வைத்துள்ளது. வெளிமாநில மக்கள...
காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது, இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோயம்புத்தூர், எனக்கு முக்கியமான இடம். அங்கே என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். சுவாமி சச்சிதானந்தன் அவர்களின் ஊர். அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பழனி சித்தர் ஆசிர்வாததால் பிறந்தவர். இஞ்ஜினியரிங் படித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தை வாழ்க்கையை விட்டு பழனி சாமிக்கு சிசியனாக மாறினார். பின்னர் இமயமலை சென்று சிவானந்த சாமியாரிடம் தீட்சை பெற்று சச்சிதானந்தன் என்று பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையில...