Monday, June 22
Shadow

கிராமங்களை தத்து எடுக்கும் கமல்ஹாசன் – முதலில் எந்த ஊர் கிராமம் தெரியுமா?

கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ந்தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம்.

நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக, எங்கள் பானையில் எவ்வகைச் சோறு இருக்கிறது என்பதைப் பதம் பார்ப்பதற்கு ஏதுவாக முதல்கட்டமாகச் சில கிராமங்களைத் தத்தெடுக்கவிருக்கிறோம். ஒரு சோறு பதம்போல இது, நாங்கள் செய்து காட்டும் எங்களுடைய செயல்திறனுக்கான அடையாளத்திட்டம்.

ஆமாம், நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக, எங்கள் பானையில் எவ்வகைச் சோறு இருக்கிறது என்பதைப் பதம் பார்ப்பதற்கு ஏதுவாக முதல்கட்டமாகச் சில கிராமங்களைத் தத்தெடுக்கவிருக்கிறோம். ஒரு சோறு பதம்போல இது, நாங்கள் செய்து காட்டும் எங்களுடைய செயல்திறனுக்கான அடையாளத்திட்டம்.

முதலில் ஒரே ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

அங்கு கல்வியை தொடர்ந்து நல்ல குடிநீர் வேண்டும், சுற்றம் சுத்தம், சுகாதாரம் வேண்டும், கலை நயம் கொண்ட பொழுது போக்கு வேண்டும், வெளியே போய் ஊர் திரும்ப நல்ல போக்குவரத்து வசதி வேண்டும், நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும். இப்படி அரசாங்கம் செய்யத் தவறியதை நாங்கள் செய்யப் போகிறோம். ஆம், நாளை நிச்சயம் நமதே. களத்தில் சந்திப்போம், கரம் கோர்ப்போம், தமிழகம் காப்போம். என்று கூறியிருக்கிறார்.

முதலில் இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு கிராமத்தையே கமல் தத்தெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply