Friday, January 17
Shadow

இதுதான் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம் – நடிகர் சூரி

தற்போது சூரி முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். சூரி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் பாண்டிராஜ் இயக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் ஒன்று. கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூரி, பாட்டிகளோடு சேர்ந்து செல்பி எடுத்து அதனை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் ‘இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி…(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்)’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply