
இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

இவர் பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்கள்
அனிச்சமலர், , பன்னீர் புஷ்பங்கள், ஆகாய கங்கை, நான் சிகப்பு மனிதன், இதய கோவில், உதயகீதம், உன்னை விடமாட்டேன், உன் கண்ணில் நீர் வழிந்தால், மரகத வீணை, ரெட்டை வால் குருவி, வேலைக்காரன், கிருஷ்ணன் வந்தான், சிறைப்பறவை, மைக்கேல் ராஜ், கலியுகம், சொல்ல துடிக்குது மனசு, தாய்ப்பாசம், அன்னக்கிளி சொன்ன கதை, ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான், கேளடி கண்மணி, இதயவாசல், தந்துவிட்டேன் ௭ன்னை, உன்னை வாழ்த்தி பாடுகிறேன், பிரியங்கா, பூமணி, சூரிய வம்சம், சிம்மராசி, கும்பகோணம் கோபாலு, ராஜஸ்தான், தொடரும், நிலவே முகம் காட்டு, பாரதி, இளையவன், காசி, இவன், ௭ன் மனவானில், பிதாமகன், கரகாட்டக்காரி, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, உள்ள கடத்தல், மாயக்கண்ணாடி, உதயம், தனம், கண்ணுக்குள்ளே, மத்திய சென்னை, அழகர் மலை, நந்தலாலா, அய்யன், அஜந்தா, மத்தாப்பூ, மறந்தேன் மன்னித்தேன், ஒரு ஊருல
