Monday, January 17
Shadow

நடிகை மற்றும் தயாரிப்பாளர் குஷ்பூ பிறந்த தினம் இன்று

1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

வடநாட்டில் பிறந்த ஒரு இஸ்லாமிய பெண் இன்று தமிழ் நாட்டு மருமகளாக வாழ்கிறார் இதெல்லாம் விட இவரின் முக்கிய அம்சம் என்னவென்றால் தமிழ் இலக்கியம் இலக்கணம் தெரிந்த பெண் என்பது தமிழை மிக தெளிவாக பேசக்கூடியவர் அதோடு ள ழ உச்சரிப்பை தமிழர்களை விட மிக அழகாக பேசக்கூடியவர் இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழுக்கு முக்கியதுவம் கொடுக்கும் திமுக கட்சியின் மேடை பேச்சாளராக இருந்தவர்.

இவர் நடித்த திரைப்படங்கள்

தர்மத்தின் தலைவன், வருஷம் 16,. வெற்றி விழா, கிழக்கு வாசல், நானும் இந்த ஊருதான்,தாலாட்டு பாடவா, ஆரத்தி எடுங்கடி, நடிகன், மை டியர் மார்த்தாண்டன், பாட்டுக்கு நான் அடிமை, மைக்கேல் மதன காமராசன், நாட்டுக்கு ஒரு நல்லவன், விக்னேஷ்வர், சின்ன தம்பி, கிழக்குக் கரை, பிரம்மா, இரவு சூரியன், பாண்டியன், அண்ணாமலை, மன்னன், இது நம்ம பூமி, அம்மா வந்தாச்சு, பாண்டித்துரை, சேவகன், சிங்காரவேலன், நாளைய செய்தி, ரிக்சா மாமா, மறவன், புருச லட்சணம், உத்தம ராஜா, தர்ம சீலன், காத்திருக்க நேரமில்லை, பிரதாப், ரோஜாவைக் கிள்ளாதே, வேடன், கேப்டன் மகள், ஜாதிமல்லி, மனசு ரெண்டும் புதுசு, வனஜா கிரிஜா, நாட்டாமை, இந்து, வா மகளே வா, சின்ன வாத்தியார், கருப்பு நிலா, முறை மாமன், நாட்டுப்புற பாட்டு, வர்றார் சண்டியர், என் பொண்டாட்டி நல்லவ, கோலங்கள், முத்துக்குளிக்க வாரிகளா, தேடி வந்த ராசா, எனக்கொரு மகன் பிறப்பான், இரட்டை ரோஜா, கோபாலா கோபாலா, கல்யாண வைபோகம், தாலி புதுசு, பத்தினி, எட்டுப்பட்டி ராசா, கலர் கனவுகள், ஜாலி, துள்ளித் திரிந்த காலம், கல்யாண கலாட்டா, குரு பார்வை, பொண்ணு விளையிற பூமி, வீரத்தாலாட்டு, சிம்மராசி, வீரம் விளஞ்ச மண்ணு, மின்சார கண்ணா, உன்னைத் தேடி, பொண்ணு வீட்டுக்காரன், மனைவிக்கு மரியாதை, மலபார் போலிஸ், சுயம்வரம், குடும்பச் சங்கிலி, அலைபாயுதே, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, மகளிர்க்காக, புரட்சிக்காரன், உன்னை கண் தேடுதே, விரலுக்கேத்த வீக்கம், சின்னச் சின்ன கண்ணிலே, குரோதம் 2, கரிசக்காட்டு பூவே, சிம்மாசனம், வீரநடை, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஸ்ரீ பண்ணாரி அம்மன், காற்றுக்கென்ன வேலி, ஜூன் ஆர், வெற்றிவேல் சக்திவேல், வேகம், பழனி, பெரியார், வில்லு, வாடா, பொன்னர் சங்கர், இளைஞன், தீயா வேலை செய்யணும் குமாரு

CLOSE
CLOSE