
‘மஹாவீர் கர்ணா’ – வாக்கைக் காப்பதற்காக வாழ்ந்த வீரனின் காவியம்; டிசம்பர் 4ல் பான் இந்தியா வெளியீடு!
சென்னை: மகாபாரதத்தில் எத்தனை வீரர்கள் இருந்தாலும், கர்ணனுக்கென்று தனி இடம் உண்டு. பிறப்பால் கிடைத்த அடையாளத்தைவிட, வாழ்க்கையில் தான் தேர்ந்தெடுத்த நட்புக்கும் கொடுத்த வாக்குக்கும் முக்கியத்துவம் கொடுத்தவன் கர்ணன். அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து, பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக உருவாகி வருகிறது ‘மஹாவீர் கர்ணா’.
பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.
கர்ணனை மையமாகக் கொண்ட பல படைப்புகள் இதுவரை வெளியாகியிருந்தாலும், ‘மஹாவீர் கர்ணா’வை வெறும் புராணக் கதையாக மட்டும் சொல்லாமல், அடையாளம், அவமானம், நட்பு, விசுவாசம், கௌரவம், விதி மற்றும் வாக்கு ஆகிய மனித உணர்வுகளின் வழியாக அணுகியிருப்பது படத்தின் முக்கிய சிறப்பாக பார்க்கப்படுகிறது.
குந்தியின் மகனாகப் பிறந்த கர்ணன், அரச குடும்பத்தில் பிறந்திருந்தும் அந்த அடையாளத்தோடு வளர முடியவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிராகரிப்பையும் போராட்டத்தையும் சந்தித்தார். ஆனால், தன்னை ஏற்றுக்கொண்டவர்களிடம் அவர் காட்டிய நன்றியும், தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியும் அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளமாக மாறியது.
அதனால்தான் கர்ணனின் வாழ்க்கை இன்றும் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெற்றி பெற்ற வீரனாக மட்டுமல்லாமல், தனது முடிவுகளுக்கான விலையைத் தெரிந்தும் தனது வார்த்தையில் இருந்து பின்வாங்காத மனிதனாக கர்ணன் பார்க்கப்படுகிறார். இந்த மனிதநேய கோணத்தையே ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் மையமாக இயக்குநர் ரமேஷ் வர்மா எடுத்திருப்பதாக படத்தின் முன்னோட்டம் உணர்த்துகிறது.
கர்ணனின் உலகை புதிய தொழில்நுட்பத்தில் காட்டும் முயற்சி
படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் அணுகுமுறை. நேரடி படப்பிடிப்பின் இயல்பான உணர்வையும், நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டத்தையும் இணைத்து, மகாபாரத காலகட்டத்தை பார்வையாளர்களுக்கு புதிய வடிவில் காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போர் களங்கள், ராஜ்ஜியங்கள், வீரர்கள், ஆயுதங்கள் என பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவாகும் இந்த உலகத்தில், அதன் மையமாக கர்ணனின் தனிப்பட்ட போராட்டம் இருக்கிறது. இதனால் வழக்கமான வரலாற்று அல்லது புராண திரைப்படங்களிலிருந்து இப்படம் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டீசரும் இந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், கர்ணனின் மனநிலையையும், அவரது வாக்கின் மீதான உறுதியையும் முன்னிலைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள்
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ராம்ஜி டாட் ‘ஹைப்ரிட் கிரியேட்டர்’ மற்றும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தொகுப்பை பிரவீன் புடி மேற்கொள்கிறார். ஸ்ரீமணி வசனங்களை எழுத, ஞானி இசையமைக்கிறார். கலை இயக்கத்தை காந்தி நாடுகுடிகர் கவனிக்கிறார்.
ரமேஷ் வர்மாவின் இதுவரையிலான படைப்புகளில் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக உருவாகி வரும் ‘மஹாவீர் கர்ணா’, மகாபாரதத்தின் கர்ணனை புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கு புதிய காட்சிமொழியில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் உருவாகி வருகிறது.
பிரம்மாண்டமான காட்சிகள் மட்டுமல்லாமல், “ஒரு மனிதன் தனது வார்த்தைக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியும்?” என்ற கேள்வியையும் முன்வைக்கும் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 2026 டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு
- இயக்கம்: ரமேஷ் வர்மா
- வசனம்: ஸ்ரீமணி
- இசை: ஞானி
- ஒளிப்பதிவு / ஹைப்ரிட் கிரியேட்டர்: ராம்ஜி டாட்
- படத்தொகுப்பு: பிரவீன் புடி
- கலை இயக்கம்: காந்தி நாடுகுடிகர்
- தயாரிப்பு: பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ், ஆர்வி ஸ்டுடியோஸ்
- வழங்குபவர்: ஜெயந்திலால் கடா

‘Mahaveer Karna’ to Hit Screens on December 4, 2026 – A Grand Epic of a Warrior Who Stood by His Word!
Chennai: Among the many legendary warriors of the Mahabharata, Karna holds a unique place in the hearts of audiences. More than the identity he was born with, Karna valued the relationships he chose, the friendships he honoured, and the promises he made. Bringing this iconic character to the big screen in a grand new format is ‘Mahaveer Karna’, which is gearing up for a pan-India theatrical release.
Presented by Jayantilal Gada and produced jointly by Pen Movies, Sri Neeladri Productions and RV Studios, the film is directed by blockbuster filmmaker Ramesh Varma, known for films such as Ratsasan and Khiladi.
While Karna’s story has been explored in several works over the years, ‘Mahaveer Karna’ takes a distinct approach by looking beyond the grandeur of the Mahabharata and focusing on the deeply human emotions surrounding the character — identity, rejection, friendship, loyalty, honour, destiny and the price of keeping one’s word.
Born to Kunti, Karna was denied the royal identity that came with his birth and grew up facing rejection and struggles at every stage of his life. Yet, his gratitude towards those who accepted him and his unwavering commitment to the promises he made became the defining aspects of his character.
This is what continues to make Karna one of the most fascinating figures in Indian mythology. He is remembered not merely as a formidable warrior, but as a man who was willing to face the consequences of his choices rather than compromise on his word. This human and emotional dimension forms the heart of ‘Mahaveer Karna’.
A New Visual Experience with Hybrid Live-Action
One of the film’s major highlights is its hybrid live-action format, which combines the emotional impact and realism of live-action filmmaking with the scale and possibilities of modern visual effects.
From vast battlefields and royal kingdoms to warriors and legendary weapons, the film aims to create a spectacular world inspired by the Mahabharata. At the centre of this visual grandeur, however, remains Karna’s personal journey and his inner conflict.
The teaser has already offered a glimpse into this ambitious world. While the grand visuals, warriors and battle sequences capture attention, the emotional core of the character — particularly his determination to stand by his word — remains central to the presentation.
A Strong Technical Team
The film brings together an experienced technical team. Ramji Dot serves as the cinematographer and hybrid creator, while Praveen Pudi is handling the editing. Srimani has penned the dialogues, with Gnani composing the music. Gandhi Nadukudikar is the art director.
‘Mahaveer Karna’ is shaping up to be one of the most ambitious films in director Ramesh Varma’s career. With its combination of epic storytelling, human emotions and cutting-edge visual technology, the film aims to present the legendary story of Karna to a new generation of audiences in a fresh cinematic language.
At its core, the film raises a powerful question: How far can a person go to honour a promise once given?
‘Mahaveer Karna’ is scheduled to release worldwide in theatres on December 4, 2026, as a Pan-India theatrical release.
Technical Crew
- Director: Ramesh Varma
- Dialogues: Srimani
- Music: Gnani
- Cinematography / Hybrid Creator: Ramji Dot
- Editor: Praveen Pudi
- Art Director: Gandhi Nadukudikar
- Production Houses: Pen Movies, Sri Neeladri Productions and RV Studios
- Presented by: Jayantilal Gada
