Monday, August 10
Shadow

காடுகளின் நடுவே ‘ருத்ரா’வாக மகேஷ் பாபு… ‘வாரணாசி’ படத்தின் புதிய தோற்றம் வெளியீடு!

காடுகளின் நடுவே ‘ருத்ரா’வாக மகேஷ் பாபு… ‘வாரணாசி’ படத்தின் புதிய தோற்றம் வெளியீடு!

மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய எஸ்.எஸ். ராஜமவுலி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘வாரணாசி’ (#VARANASI) திரைப்படத்தின் படக்குழு, ரசிகர்களுக்கு மிக முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

படத்தில் மகேஷ் பாபு ஏற்று நடிக்கும் ‘ருத்ரா’ கதாபாத்திரத்தின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ‘வாரணாசி’ உலகத்தின் மையக் கதாபாத்திரமாக உருவாகும் ருத்ராவின் தோற்றம், அவரது குணாதிசயம் மற்றும் அவர் பயணிக்கவிருக்கும் பிரம்மாண்டமான உலகம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

வெளியாகியுள்ள முதல் புகைப்படத்தில், அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் அமைதியாக ஓய்வெடுக்கும் ருத்ராவை பார்க்க முடிகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், இயல்பான கம்பீரத்துடன், அதே நேரத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மகேஷ் பாபுவின் தோற்றம் அமைந்துள்ளது. கதாபாத்திரத்தின் வெளிப்புற தோற்றத்தை மட்டுமல்லாமல், அதன் உள்ளார்ந்த அமைதியையும் இந்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது.

மற்றொரு புகைப்படம் ரசிகர்களை இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் பரந்த நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்கிறது. கென்யாவின் புகழ்பெற்ற மாசாய் மாரா சமவெளியில், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் விலங்குகளுக்கு மத்தியில் ருத்ரா நிற்கும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. பின்னோக்கிப் பார்க்கும் அவரது பார்வையிலும், உடல்மொழியிலும் ஒரு தலைமைத்துவமும் அதிகாரமும் வெளிப்படுகிறது.

இந்த இரண்டு புகைப்படங்களும் ‘வாரணாசி’ திரைப்படம் சாதாரணமான ஒரு கதையைச் சொல்லப்போவதில்லை என்பதை உணர்த்துகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளைக் கடந்து செல்லும், ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கதைக்களத்தில், ருத்ராவின் அசாதாரண பயணமே படத்தின் முக்கிய மையமாக அமையவுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் புனித நீர்நிலைகளில் தொடங்கும் இந்தப் பயணம், பூமியின் மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் இயற்கையின் வலிமை நிறைந்த ஆப்பிரிக்க நிலப்பரப்புகள் வரை விரிவடைகிறது. இதனால், ‘வாரணாசி’ திரைப்படத்தின் காட்சியமைப்பும், கதைக்களத்தின் பரப்பளவும் இந்திய சினிமாவில் இதுவரை காணப்படாத ஒரு புதிய அனுபவத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ருத்ரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி கூறுகையில்,

“தன்னைவிட மிகப்பெரிய ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே ருத்ரா பிறந்தவன். அவன் விரும்பிக் கேட்காத ஒரு விதியை அவன் சுமந்து கொண்டிருக்கிறான். அவன் நகைச்சுவை உணர்வு கொண்டவன்; அதே நேரத்தில் மிகவும் மென்மையானவனும் கூட. அதே சமயம், அவன் மிகவும் கடுமையானவனாகவும் இருக்கிறான். இந்த அனைத்து பரிமாணங்களையும் மகேஷ் பாபு அந்த கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

கடுமையான தோற்றத்தை வெளிப்படுத்துவது யாராலும் முடியும். ஆனால் ஒரே தருணத்தில் கடுமையையும், மென்மையையும் வெளிப்படுத்தக்கூடியவர்கள் மிகவும் குறைவு. ருத்ரா கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு கொண்டு வந்திருப்பது அந்த தனித்துவமான கலவையே” என்றார்.

மேலும், ‘வாரணாசி’ படத்தின் ஆப்பிரிக்க படப்பிடிப்பு அனுபவம் குறித்து அவர் கூறும்போது,

“இந்த புகைப்படங்கள் எங்களது ஆப்பிரிக்க படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டவை. எந்தவொரு செயற்கையாக அமைக்கப்பட்ட அரங்கமும் தர முடியாத ஒரு அனுபவத்தை அந்த நிலப்பரப்பு எங்களுக்கு வழங்கியது. கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியபோது நான் பலமுறை வியந்து போனேன். சில காலைப் பொழுதுகளில் எங்கள் கண்முன் விரிந்து கிடந்த காட்சிகளை 1.43:1 ஐமேக்ஸ் திரைக்குள் கூட முழுமையாக அடக்க முடியாது என்று தோன்றியது” எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் இசையில் உருவாகி வரும் ‘வாரணாசி’ (#VARANASI) திரைப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியாகியுள்ள இந்த இரண்டு புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ‘ருத்ரா’ கதாபாத்திரத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் திரைப்படத்தின் பிரம்மாண்ட உலகம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

உலகின் பல்வேறு நிலப்பரப்புகளை கடந்து செல்லும் ருத்ராவின் பயணம், இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான திரை அனுபவங்களில் ஒன்றாக அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் ‘வாரணாசி’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.

Mahesh Babu Turns ‘Rudhra’ in the Wild: New Stills from SS Rajamouli’s ‘VARANASI’ Raise the Excitement

On Mahesh Babu’s birthday, the makers of ‘VARANASI’ unveil two striking glimpses of his character Rudhra

On the occasion of Telugu superstar Mahesh Babu’s birthday, the makers of the much-awaited epic ‘VARANASI’ (#VARANASI) have unveiled two exclusive stills featuring Mahesh Babu as Rudhra, offering audiences a closer look at the character and the vast world of the film.

The newly released images give fans their first striking glimpse of Rudhra in his natural surroundings, while also hinting at the extraordinary scale and ambition of SS Rajamouli’s upcoming spectacle.

The first still captures Rudhra resting on a bamboo raft in the middle of a dense forest. With a composed demeanour, effortless style and an intense presence, Mahesh Babu’s look reflects the quiet strength and mysterious personality of the character.

The second still transports audiences to the breathtaking plains of Kenya’s Maasai Mara, where Rudhra is seen standing amid giraffes and wildebeest. Looking back with a commanding presence, Mahesh Babu’s portrayal hints at a character who carries both authority and an undeniable sense of purpose.

Together, the two stills offer a glimpse into the expansive world of ‘VARANASI’, a globe-trotting, century-spanning epic that follows one man on an extraordinary journey. The story takes Rudhra from the sacred waters of India to some of the wildest and most untamed corners of the world, promising a cinematic experience of immense scale.

Speaking about Rudhra and Mahesh Babu’s portrayal of the character, director SS Rajamouli said,

“Rudhra was born to fulfil a purpose much larger than himself. He carries a destiny he did not ask for. He is witty, he is vulnerable, and he is fierce. That is what Mahesh brought to him. Anyone can play fierce. Very few can play fierce and fragile in the same breath.”

Rajamouli also opened up about filming the newly released visuals in Africa and how the natural landscapes contributed to the film’s visual grandeur.

“These frames are from our Africa schedule, and the land gave us something no set could. Shooting around Kilimanjaro and in the Maasai Mara, I was stunned. There were mornings when I felt even the 1.43:1 IMAX frame could not hold what was in front of us.”

The Africa schedule appears to be an integral part of the film’s visual scale, with the vast landscapes of Kilimanjaro and Maasai Mara adding an authentic sense of grandeur that would be difficult to recreate on a set.

Directed by SS Rajamouli and featuring music by MM Keeravani, ‘VARANASI’ is produced by Sri Durga Arts and Showing Business.

The film is slated for a worldwide theatrical release on April 7, 2027, in IMAX, and the latest glimpses of Mahesh Babu as Rudhra have further heightened anticipation for what promises to be one of the most ambitious Indian cinematic spectacles.