Thursday, June 24
Shadow

மலேசியா டு அம்னீஷியா: சினிமா விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர்கள், வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.

பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார்.

மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வைத்துக்கொண்டு ஒரு காமெடி திரைப்படத்தைத் தந்திருக்கிறார் ராதாமோகன். கதையின் ஒன்லைன் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தவிர, துப்பறியும் மாமாவின் பாத்திரமும் கதைக்கு கலகலப்பை சேர்த்திருக்கிறது.

சிக்கலான சூழலில் உருவாகும் அபத்தமான தருணங்களை நகைச்சுவையாக்க முயற்சித்திருக்கிறார் ராதாமோகன்.

இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.எஸ். பாஸ்கரும் கருணாகரனும் வரும் காட்சிகள் சற்றுப் பரவாயில்லை. வாணி போஜனுக்கு, அவருடைய தொலைக்காட்சி தொடர்களின் நீட்சியைப் போலவே இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் குறை சொல்ல முடியாதபடி அமைந்திருக்கின்றன.

படத்தின் பிளஸ்: எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் நடிப்பு; பிரேம்ஜியின் இசை, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு

படத்தின் மைன்ஸ்: நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு

மொத்தத்தில் மலேசியா டு அம்னீஷியா ஒரு முறை என்ற ரகமே.

CLOSE
CLOSE