Tuesday, August 25
Shadow

வியாசர்பாடியின் மண்ணில் இருந்து ஒலிக்கும் ‘மன்னாரு’! – மன்னர் முத்து குரலில் புதிய இசைப் பயணத்தை தொடங்கிய ரகிடா என்டர்டெயின்மென்ட்

வியாசர்பாடியின் மண்ணில் இருந்து ஒலிக்கும் ‘மன்னாரு’! – மன்னர் முத்து குரலில் புதிய இசைப் பயணத்தை தொடங்கிய ரகிடா என்டர்டெயின்மென்ட்

சந்தோஷ் நாராயணன் இசையில், கென் ராய்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மன்னாரு’ பாடல்

தமிழ் இசை உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுவிதமான இசை அனுபவங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், இசையின் மூலம் ஒரு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறது ரகிடா என்டர்டெயின்மென்ட். அந்நிறுவனத்தின் முதல் இசை வெளியீடாக உருவாகியுள்ள ‘மன்னாரு’ பாடல், ஆகஸ்ட் 8 முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியாகியுள்ளது.

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கியுள்ள இந்தப் பாடல், வழக்கமான இசை வெளியீடாக இல்லாமல், தனக்கென ஒரு தனித்துவமான களத்தையும், இசை மற்றும் காட்சிகளின் மூலம் புதிய அனுபவத்தையும் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.

‘மன்னாரு’ பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதுடன், இசை நிரலாக்கம் மற்றும் கருத்தாக்கத்தையும் மேற்கொண்டுள்ளார். தனது தனித்துவமான குரல் பாணியால் கவனம் ஈர்க்கும் மன்னர் முத்து, இப்பாடலை பாடியுள்ளார். பாடலாசிரியர்களாக கே. காட்டியன் மற்றும் கானா பிரான்சிஸ் பணியாற்றியுள்ளனர்.

இசையும் மண்ணின் மணமும் கலந்த ‘மன்னாரு’

‘மன்னாரு’ பாடலின் இசை அமைப்பு முதல் அதன் காட்சியமைப்பு வரை, இயல்பான வாழ்க்கைச் சூழலையும் உற்சாகமான இசை உணர்வையும் ஒன்றாகக் கொண்டுவரும் முயற்சி இதில் தெரிகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை அணுகுமுறையும், மன்னர் முத்துவின் குரலும் இணைந்து பாடலுக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன.

இந்தப் பாடலின் வீடியோவை கென் ராய்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணனின் கருத்தாக்கத்தில் உருவான இந்த வீடியோவுக்கு ஜகதேஷ் ஜெயமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஜீத் லக்ஷ்மிநரசிம்மன் தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.

பாடலின் காட்சிகளில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கால்பந்து அணியினரும் சிறப்பு பங்கேற்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது. குறிப்பாக வியாசர்பாடி J.J.R. நகர் சிறுவர்கள், வியாசர்பாடி SC STEDS கால்பந்து அணியினர் மற்றும் சத்யா மூர்த்தி நகர் 51, 52, 53-வது பிளாக் சிறுவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பாடல் வீடியோவுக்கு ஒரு இயல்பான களச்சூழலும், அந்தப் பகுதியின் வாழ்வியலை பிரதிபலிக்கும் தன்மையும் கிடைத்துள்ளது.

பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு

‘மன்னாரு’ பாடலின் இசைப் பயணத்தில் பல திறமையான இசைக் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

பேஸ் கிட்டாரில் நவீன் நாபியர் மற்றும் ரூபெந்தர் வெங்கடேஷ், கீபோர்டில் ஆதித்யா ரவீந்திரன் மற்றும் புவனேஷ், டேப்ஸில் புத்தர் கலைக்குழு, டிரம்ஸில் சித்தார்த் நாகராஜன், டோலக்கில் கச்சா வெங்கட், சைடு டிரம்மில் முனியா ஆகியோர் பங்களித்துள்ளனர்.

பாடலின் ஒலிப்பதிவு பணிகளை சந்தோஷ் நாராயணன், கார்த்திக் மாணிக்கவாசகம், ரூபெந்தர் வெங்கடேஷ் மற்றும் பிரணவ் முனிராஜ் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள ஃப்யூச்சர் டென்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் ஒலிப்பதிவு நடைபெற்றுள்ளது.

மிக்சிங் பணியை சந்தோஷ் நாராயணன் மேற்கொண்டுள்ள நிலையில், கூடுதல் மிக்சிங் பணியை ரூபெந்தர் வெங்கடேஷ் செய்துள்ளார். ஆர்.கே. சுந்தர் மாஸ்டரிங் பணியை மேற்கொண்டுள்ளார். இசை மேலாண்மையை மீனாட்சி சந்தோஷ் கவனித்துள்ளார்.

காட்சிகளுக்கு வலு சேர்க்கும் தொழில்நுட்பக் குழு

‘மன்னாரு’ பாடலின் வீடியோ உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்துள்ளனர்.

இணை இயக்குநராக தேவிகா சுரேஷ், இணை ஒளிப்பதிவாளராக கார்த்திகேயன், ஸ்டெடிகேம் இயக்குநராக ராஜாராம், இணை தொகுப்பாளராக ஏ. எஸ். அரவிந்த், தொகுப்பு உதவியாளராக பவன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

டிஜிட்டல் இமேஜிங் பணிகளை மாங்கோ போஸ்ட் மேற்கொண்டுள்ளது. ஃபிராங்க்ளின் வி கலரிஸ்டாகவும், வீரா தலைப்பு வடிவமைப்பாளராகவும், அபிஜீத் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

வீடியோவில் ஜிமிகிலி, பச்சகிளி, பிரான்சிஸ், சப்பா தல, அபெலோ, முனியா, சந்தோஷ், தேவராஜ் இசைக்குழு, கிருஷ்ணமூர்த்தி, ஆகாஷ், ஸ்வாதி, தாரணி, ஹேர்கட் முருகன் மற்றும் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரகிடா என்டர்டெயின்மென்ட்டின் முதல் அடியாக ‘மன்னாரு’

ஒரு பாடலை வெளியிடுவதைக் கடந்து, இசை, காட்சிகள், கலைஞர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்பு என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து தனது முதல் முயற்சியை தொடங்கியுள்ளது ரகிடா என்டர்டெயின்மென்ட்.

மன்னர் முத்துவின் குரல், சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் கென் ராய்சனின் காட்சியமைப்பு ஆகியவை இணைந்துள்ளதால், ‘மன்னாரு’ பாடல் இசை ரசிகர்களிடையே தனி கவனத்தைப் பெற்றுள்ளது.

ரகிடா என்டர்டெயின்மென்ட்டின் இசைப் பயணத்தில் முதல் படியாக வெளியாகியுள்ள ‘மன்னாரு’, வரும் காலங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் இசை சார்ந்த புதிய முயற்சிகளுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

‘மன்னாரு’ பாடலை இங்கே காணலாம்:

‘Mannaru’ Echoes the Spirit of Vyasarpadi as Rakita Entertainment Begins Its Musical Journey

Mannar Muthu lends his distinctive voice to ‘Mannaru’, presented by Mannar Muthu and Santhosh Narayanan

The Tamil music scene welcomes a fresh musical venture as Rakita Entertainment marks its entry into the world of music with its first independent release, ‘Mannaru’, presented by Mannar Muthu and renowned music composer Santhosh Narayanan.

Released on August 8 across all major music platforms, ‘Mannaru’ brings together the distinctive voice of Mannar Muthu, the musical sensibilities of Santhosh Narayanan and the visual direction of Ken Royson, creating an energetic and unconventional musical experience.

Rather than being just another song release, ‘Mannaru’ brings together music, visual storytelling and the vibrant spirit of the community, giving the track a distinctive identity.

A Musical Blend of Energy and Authenticity

‘Mannaru’ has been conceptualised, composed and programmed by Santhosh Narayanan, while Mannar Muthu has lent his unique voice to the song. The lyrics have been penned by K. Kaattiyan and Gana Francis.

The musical arrangement combines a range of live instrumental performances, adding depth and energy to the track. Naveen Napier and Rubendhar Venkatesh have played the bass guitar, while Aditya Ravindran and Bhuvanesh have contributed on keyboards.

The instrumental ensemble also features Buddhar Kalaikuzhu on tapes, Siddharth Nagarajan on drums, Kacha Venkat on dholak and Muniya on side drum.

The recording was handled by Santhosh Narayanan, Karthik Manickavasagam, Rubendhar Venkatesh and Pranav Muniraj, with the track recorded at Future Tense Studios, Chennai.

Santhosh Narayanan has handled the mixing, with additional mixing by Rubendhar Venkatesh, while R.K. Sundar has taken care of the mastering. Meenakshi Santhosh has handled music management.

Vyasarpadi Becomes Part of the ‘Mannaru’ Visual Experience

One of the notable highlights of ‘Mannaru’ is its visual treatment, which brings an authentic community atmosphere to the song.

Directed by Ken Royson, the video is based on a concept by Santhosh Narayanan, with cinematography by Jagadesh Jeyamani and editing by Abhijeeth Lakshminarasimman.

Children and youngsters from Vyasarpadi have also participated in the video, adding a natural and lively dimension to the visuals. Special participation includes children from Vyasarpadi J.J.R. Nagar, members of the Vyasarpadi SC STEDS Football Team, and children from Sathya Moorthy Nagar Blocks 51, 52 and 53.

Their participation brings an authentic local flavour to the video and makes the visual experience closely connected to the everyday energy and spirit of the neighbourhood.

A Strong Technical Team Behind the Video

The video features a strong technical crew working alongside director Ken Royson.

Devika Suresh serves as Associate Director, Karthikeyan as Associate Cinematographer, Rajaram as Steadicam Operator and A.S. Aravind as Associate Editor. Pavan has worked as the Editing Assistant.

Mango Post has handled Digital Imaging, while Franklin V is the Colorist. Veera has worked on the Title Design, with Abhijeeth handling Post Production.

The video features Jimikki, Pachakili, Francis, Sappa Thala, Abelo, Muniya, Santhosh, Devaraj Music Band, Krishnamoorthy, Akash, Swathi, Dharani, Haircut Murugan and Gopi.

‘Mannaru’ Marks the Beginning of a New Chapter for Rakita Entertainment

With ‘Mannaru’, Rakita Entertainment has chosen to begin its musical journey by bringing together a distinctive combination of music, visual storytelling, local talent and community participation.

The collaboration between Mannar Muthu and Santhosh Narayanan, coupled with Ken Royson’s visual treatment, gives the song a character of its own.

As Rakita Entertainment takes its first step into the music space, ‘Mannaru’ is expected to serve as a promising beginning to the company’s upcoming musical ventures and create a fresh connection with music lovers.

Watch ‘Mannaru’ here: