Friday, April 17
Shadow

தமிழ் சினிமாவில் முதல் முறையாக மெர்சல் படைத்த சாதனை

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் தற்போது மெர்சல் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். படம் ரிலீஸ்க்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளத்தால், படத்தின் மீதமுள்ள போஸ்ட் புரோடக்சன் வேலைகள் மும்பரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் மெர்சல் அதிகமான தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

இந்நிலையில், இதுவரை தமிழ் திரைபடங்களே வெளிவராத ஜப்பானில் (Tokyo, Ebina/Kanagawa, Osaka and Nagoya) போன்ற இடங்களில் மெர்சல் முதல்முறையாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.

Leave a Reply