Sunday, September 25
Shadow

மெர்சல் விவகாரம் கமல்ஹாசனின் உள் குத்து திணறும் ரசிகர்கள்

உலகமே இன்று விஜய்யின் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் ஏன் அஜித் ரசிகர்களும் விஜய் படத்துக்கு முதல் முறையாக அதரவு தெரிவித்து வருகின்றனர் காரணம் பா ஜா கா கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் காரணம் அவர்கள் வைக்கும் கோரிக்கையை செய்தால் தமிழ் சினிமாவை அடகு வைப்பதுக்கு சமம் அப்புறம் எது செய்தாலும் இவர்கள் எதாவது ஒரு பிரச்சனையை கிளப்புவார்கள் அதோடு சினிமா ரசிகர்கள் மதம் ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் சமீபமாக சினிமாவுக்குள் அரசியல் கொண்டுவருகிறார்கள் இதனால் இன்று நாடே கொதித்து வருகிறது அதோடு படத்துக்கு மிக பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது.

இன்று மெர்சல் படத்துக்கு அதரவாக அரசியல்வாதிகள் மட்டும் இல்லாமல் வாடா இந்தயாவில் உள்ள ஊடகங்களும் விஜய்க்கு அதரவாக பேசிவருகிறது அதோடு எல்லா கட்சி தலைவர்களும் அதரவு கரம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக ராகுல்காந்தி, ப.சிதம்பரம் வைகோ,மு. க ஸ்டாலின் போன்ற தலைவர்கள் பேசிவருகிறார்கள் அதோடு உலகநாயகன் கச்மல்ஹாசனும் அதரவு கர நீட்டியுள்ளார்.

மெர்சல்’ விவகாரம் தொடர்பாக முதல் சப்போர்ட் கமலிடமிருந்துதான் வந்தது. மேலே விழுந்து தேள் புடுங்கினாலும், இன்டஸ்ட்ரி கொஞ்சம் மெத்தனமாகதான் இருக்கும் என்று புரிந்து கொண்டாலும், ‘ரஜினி குரல் கொடுக்கலே… நடிகர் சங்கம் வாயை தொறக்கலே…’ என்று விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள். நடுநிலையாளர்களின் பார்வை முழுக்க ரஜினி வாய் திறக்கும் திருவிழாவுக்காக காத்திருந்தது. எப்படியோ… ரஜினி தன் குரலை பதிவு செய்துவிட்டார். ஆனால் வழக்கம் போல வழ வழா. கொழக் கொழவென! Important topic addressed… Well done !!! Congratulations team #Mersal என்று அவர் போட்ட ட்விட் மின்னல் வேகத்தில் பரவியது.

அதற்கு முன்பாக அதே நாளில் விஜய் அட்லீ சகிதம் மெர்சல் படம் பார்த்தார் கமல். படத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் இன்னும் கூட விரிவாக பேசலாம் அல்லவா? தன் வீட்டுக்கே வந்த விஜய் அட்லீயுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது பின்னணியில் வைக்கப்பட்டிருந்த அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டர்தான் இப்போது ஹைலைட். கமல் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதற்கு இதுதான் உதாரணமும் கூட. மெர்சல் படம், அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து உருவப்பட்டது என்கிற உண்மை ஊர் உலகத்திற்கு தெரிந்திருக்கிறது. ஊருக்கே தெரிந்த விஷயம் கமலுக்கு தெரியாதா? பொருத்தமாக ஒரு போஸ்டரை தயார் செய்து அது பின்னணியில் தெரிகிற இடத்தில் போட்டோவுக்கு போஸ் தருகிற அளவுக்கு திட்டமிட்டிருக்கிறார்.இதுவரை இல்லாத போஸ்டர் தீடீர் என்று எப்படி அவர் வீட்டுக்கு வந்தது என்று தெரியவில்லை

இப்போது சொல்லுங்க…. கமல் அரசியலுக்கு தகுதியானவரா? இல்லையா?

Leave a Reply