Saturday, April 18
Shadow

விஜய் ரசிகர்களை இன்று மெர்சல் படுத்த போகும் இரட்டை விருந்து

மெர்சல் என்றாலே அனைவரும் மெர்சல் ஆகிறார்கள் ஏன் தெரியுமா விஜய் மற்றும் பட குழு அப்படி விருந்து கொடுத்துகொண்டே இருகிறார்கள். அதன் படி ரசிகர்களுக்கு டீசருக்கு முன் ஒரு இல்லை இரண்டு சுப்பர் விருந்து கொடுக்க இருகிறார்கள் .

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே…’ மற்றும் ‘மெர்சல் அரசன்…’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று மாலை 4 மணியளவில் வெளியிட இருக்கின்றனர்.

ஒரே நாளில் இரண்டு பாடல்களின் வரிகள் வீடியோவை வெளியிடுவது விஜய் ரசிகர்களிடையே இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி தினத்தில் இப்படம் வெளியாகிறது.

Leave a Reply