
மர்மப் பெட்டியைச் சுற்றி நகரும் குடும்பக் கதை… ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை எகிறவைத்தது!
குடும்ப பொழுதுபோக்கு, பிளாக் ஹியூமர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மர்மமான ஒளியை வெளிப்படுத்தும் ஒரு பெட்டியை வயதான பாட்டியும் சிறுவனும் கையில் ஏந்தியபடி நிற்க, அவர்களைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியம், பதற்றம் மற்றும் பயம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கிப் பார்ப்பது போஸ்டரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், இது சாதாரண குடும்பக் கதையல்ல என்பதை உணர்த்துகின்றன.
அளவுக்கு மீறிய ஆசைகளால் சிக்கலில் சிக்கும் ஒரு நடுத்தர குடும்பம், எதிர்பாராத ஃபேண்டஸி சம்பவங்களின் மூலம் அந்த பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை, திரில் மற்றும் குடும்ப உணர்வுகளை சமநிலைப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிளாக் ஹியூமர் பாணியில் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் முயற்சியாக இந்தப் படம் உருவாகி வருவதாகவும் படக்குழு கூறியுள்ளது.
படத்தில் தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான அக்ஷரா ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாவல் நவகீதன், திவ்யா ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா
வசனம்: செ. ஹரி உத்ரா, பி. ரஞ்சித் குமார்
ஒளிப்பதிவு: கே.எஸ். பழனி
இசை: ஏ.ஜே. அலி மிர்சாக்
படத்தொகுப்பு: பிரசாந்த், எஸ்.பி. ராஜா
கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி
சண்டைப்பயிற்சி: கனல் வி. கண்ணன், கனல் எஸ். குகன்
நடனம்: ஐ. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி
பாடல் வரிகள்: மோகன் ராஜன், கவிஞர் சாரதி
நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், எம். விஸ்வநாதன், சேட்டு கே
இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் வி.
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Mystery Box Sparks Curiosity: ‘Master Plan’ First Look Raises Expectations
The first look poster of ‘Master Plan’, an upcoming family entertainer blending black comedy and fantasy, has been unveiled to a positive response from audiences. The film is jointly produced by Uthra Productions, DJ International, and Diya Films, with C. Hari Uthra serving as the writer, director, and producer.
The newly released first look has already generated excitement by hinting at the film’s intriguing storyline. The poster features an elderly grandmother and a young boy holding a mysterious glowing box, while the rest of the family stands around them with expressions of shock, fear, and curiosity. The backdrop of an old ancestral house, scattered bundles of cash, and a gun suggests that the magical box will play a pivotal role in a thrilling family drama.
The film revolves around a middle-class family aspiring to live beyond its means and the unexpected challenges that follow. With fantasy and humour woven into the narrative, the story explores how the family finds its way out of the chaos. The makers describe Master Plan as a black comedy family entertainer in the vein of films like Kolamavu Kokila, Doctor, and Tourist Family, promising a unique blend of comedy, suspense, and emotions.
The film stars Tarun Vijay and Bigg Boss fame Akshara Reddy in the lead roles. The supporting cast includes Paval Navageethan, Divya Jagath, Appukutty, Deepa Shankar, Thenappan, Sampath Ram, Gajaraj, and several others in key roles.
Shooting is currently progressing at a brisk pace in Theni, Villupuram, and Gingee, with the makers expected to announce further updates in the coming weeks.
Technical Crew
Writer, Director & Producer: C. Hari Uthra
Dialogues: C. Hari Uthra, P. Ranjith Kumar
Cinematography: K.S. Palani
Music: A.J. Ali Mirzak
Editing: Prashanth, S.B. Raja
Art Director: Edward Kennedy
Action: Kanal V. Kannan, Kanal S. Gugan
Choreography: I. Radhika, Rajesh Christy
Lyrics: Mohan Rajan, Kavignar Sarathi
Executive Producers: Manov Selvaraj, Thanagopal, M. Viswanathan, Settu K
Co-Producers: Balagangadharan, Divya Jagath, Janarthanan V.
PRO: Satheesh (AIM)
