மர்மப் பெட்டியைச் சுற்றி நகரும் குடும்பக் கதை… ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை எகிறவைத்தது!
மர்மப் பெட்டியைச் சுற்றி நகரும் குடும்பக் கதை... ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை எகிறவைத்தது!
குடும்ப பொழுதுபோக்கு, பிளாக் ஹியூமர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மர்மமான ஒளியை வெளிப்படுத்தும் ஒரு பெட்டியை வயதான பாட்டியும் சிறுவனும் கையில் ஏந்தியபடி நிற்க, அவர்களைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியம், பதற்றம் மற்றும் பயம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக...
