Friday, March 6
Shadow

Tag: #nageshthiraiyarangam #aari #ashanasaaveri #saminathan #kaalivengat

நாகேஷ் திரையரங்கம் – திரைவிமர்சனம் ( சிறப்பான டிஜிட்டல் அரங்கம் ) Rank 3/5

நாகேஷ் திரையரங்கம் – திரைவிமர்சனம் ( சிறப்பான டிஜிட்டல் அரங்கம் ) Rank 3/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் சீசன்கள் அதிகம் அதாவது காதல் படங்கள் வந்தால் தொடர்ந்து வரும் அதேபோல பேய் படம் வெற்றி கிட்டதட்ட ஒரு ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்துகொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன பிரேக் அப்புறம் வந்துள்ள பேய் படம். பொதுவாக தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் கிராபிக்ஸ் தலையைவிரித்து அகோரமான முகங்களை கொண்டு தான் பேய் படங்கள் வரும் அதில் பாதி பயத்தை பின்னணி இசை மூலம் தான் பயமுறுத்துவார்கள் அனால் நாகேஷ் திரையரங்கம் படத்தில் அப்படி இல்லாமல் வித்தியாசமான கதை களம் பேயுடன் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்து இருகிறார்கள். அதாவது சமுகத்தில் நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இசாக் வித்தியாசமான கதைக்கலாம் அதற்கு தேவையான நட்சத்திரம் அது படத்துக்கு மேலும் பலம் முதல் பாதியை காமெடி படமாகவும் இடைவேளைக்கு முன் ஒரு சின்ன பேய் பயத்தை கொடுத்து கலகலவென விறு விருப்பாக கொடுத்து இருக்கிறார்...
உலகெங்கும் இந்த மாதம்  16ம் தேதி  வெளியாகும் “நாகேஷ் திரையரங்கம்”

உலகெங்கும் இந்த மாதம் 16ம் தேதி வெளியாகும் “நாகேஷ் திரையரங்கம்”

Latest News, Top Highlights
ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் திரு. ராஜேந்திர எம்.ராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படித்தான்” படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி ஜோடியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். நெளஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில், தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இன்று வரைய...
இசையமைப்பாளர் ”ஸ்ரீ” யின் இசையில் “நாகேஷ் திரையரங்கம்”. பாடல்கள் வெளியானது

இசையமைப்பாளர் ”ஸ்ரீ” யின் இசையில் “நாகேஷ் திரையரங்கம்”. பாடல்கள் வெளியானது

Latest News, Top Highlights
டிரான்ஸ் இண்டியா மீடியா சார்பில், ராஜேந்திர M ராஜன் தயாரிப்பில், தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இயக்கத்தில், உருவாகி இருக்கும் திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ”நெடுஞ்சாலை” ஆரி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மாசூம் சங்கர், அதுல்யா, எம்.ஜி.ஆர் லதா, மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, “பழைய சோறு பச்ச மிளகா” பாடல் புகழ், இசையமைப்பாளர் ”ஸ்ரீ” அவர்கள் இசையமைத்திருக்கிறார். பாடல்களை தாமரை, “மாயநதி” உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், மற்றும் ஜெகன் சேட் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-&ல் சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டில், ஆரி, ஆஷ்னா சவேரி, மாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். ”நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16-ல் திரைக்கு வர இருக்கிறது...
நடிகர் ஆரியின் “நாகேஷ் திரையரங்கம்” படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ்

நடிகர் ஆரியின் “நாகேஷ் திரையரங்கம்” படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ்

Latest News, Top Highlights
ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின்திரு.இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக்இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரிகதாநாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில்எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகைசித்தாராவும்நடித்திருக்கிறார்கள். நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும்பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும்...
‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

Latest News
நடிகர் ஆரி, நடிகை ஆஷ்னாசவேரி உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா அண்டு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு தடை கோரி நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- என்னுடைய தந்தை நாகேஷ், சென்னை தியாகராயநகரில் நாகேஷ் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக தியேட்டர் நடத்தி வந்தார். இந்தநிலையில், டிரான்ஸ் இந்தியா அண்டு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் திரைப்படம் எடுத்து வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. திரைப்படத்துக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைப்பதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் எந்த முன் அனுமதியும் பெறவில்லை. எனவே, ‘நாகேஷ் திரையரங்...
நடிகர் ஆரியின் நாகேஷ் திரையரங்கம் பர்ஸ்ட் லுக்  வெளியிடும் இயக்குனர் அமீர்

நடிகர் ஆரியின் நாகேஷ் திரையரங்கம் பர்ஸ்ட் லுக் வெளியிடும் இயக்குனர் அமீர்

Latest News
நெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நாகேஷ்திரையரங்கம்'. ட்ரான்ஸ் இண்டியா மீடியா&எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தை அகடம் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பிடித்த இசாக் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஆஷ்னாசாவேரி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் காளிவெங்கட், சுவாமிநாதன் நடிக்கின்றனர். இவர்களுடன் படத்தில் அதி முக்கிய கதாப்பாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா, சித்தாரா, போன்றோர் நடிக்கின்றனர். வெகு வேகமாக மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று இரவு வெளிவருகிறது. இயக்குனர்கள் அமீர் மற்றும் கரு.பழனியப்பன் இதை வெளியிடுகிறார்கள்...