தமிழ் சினிமாவின் தற்போதைய பரபரப்பான காதல் ஜோடி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா. இருவரும் கடந்த சில வருடங்களாக காதலர்களாக இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணம், அடிக்கடி சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரையும் பொறாமைப்பட வைத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று மீண்டும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து பொறாமைப்பட வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். தனியார் டிவியின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை, சிறந்த நடிகை மக்கள் தேர்வு என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன. ‘அறம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டது.
விருதுகளைப் பெற்ற பின்பு நயன்தாராவுடன் இருக்கும் ஒரு செல்பி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன். “என் விருது மற்றும் அவருடைய விருதுகளுடன்” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு ‘மைன்ட் வாய்ஸ்’ என “நாம எப்படி இப்படி விருதை வாங்கி இந்த புள்ள கிட்ட கொடுக்கப் போறோமோ” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவுக்கு பலவிதமான பொறாமை கமெண்ட்டுகளும், கிண்டல் கமெண்ட்டுகளும் வந்துள்ளன