Wednesday, June 24
Shadow

நெருப்புடா – திரைவிமர்சனம் (விறுவிறுப்பு) Rank – 3.5/5

தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு புது இயக்குனர் அதிலும் சிறந்த இயக்குனர் முதல் படம் இதுவரை யாரும் கால் பதிக்காத தீயணைப்பு வீரர்கள் புதிய களம் புதிய திரைகதை மேலும் ஒரு வித்தியாசமான யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் பார்த்த கதையென்றாலும் வித்தியாசமான திரைகதை திரிந்த முகங்கள் இதுவரை பார்க்காத நடிப்பு இயக்குனர் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் சிறப்பாக கவனித்து செயல்பட்டுள்ளார் என்று தான் சொல்லணும்

விக்ரம் பிரபுக்கு நிச்சயமான ஒரு சாவலான கதை அதை மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் படத்தில் பல காட்சிகளில் மிக அதிகமான ரிஸ்க் எடுத்துள்ளார் கதையின் ஓட்டம் அறிந்து தன்னை தயார்படுத்தி இயக்குனருக்கு பலம் சேர்த்துள்ளார். நெருப்புடன் அதிகமாக விளையாடியுள்ளார் இந்த ரிஸ்க் வேண்டுமா என்று கேட்க்க தோன்றுகிறது முதல் காட்சியிலே விக்ரம் பிரபு நெருப்புடன் சவாலை மிக அழகா தைரியமாக செய்து இருப்பது பாரட்ட வேண்டிய விஷயம் அதே போல விக்ரம் பிரபு நண்பர்களாக வரும் நான்கு பெரும் படத்துக்கு மிக பெரிய பலம் அந்த நால்வரும் கதை புரிந்து இயக்குனருக்கு தன நடிப்பு மூலம் பலம் சேர்த்துள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், நான் கடவுள் ராஜேந்திரன் நாகிநிடு,மதுசூதனன் ராவ், வருண் மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டான் இசையில் அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் நெருப்புடா

கதை களம்

விக்ரம் பிரபு மற்றும் அவரது நான்கு நண்பர்கள் என ஐந்து பேரும் சிறு வயதில் இருந்தே தீயணைப்பு துறை வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருப்பதோடு, சுற்று வட்டாரத்தில் எங்கு தீ விபத்து ஏற்பட்டாலும், அவர்களுக்கென்று வைத்திருக்கும் தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு தீயை அணைப்பதோடு, உயிர் சேதும் ஏற்படாமலும் தடுத்து வருகிறார்கள். அவர்களது இத்தகைய சேவைக்காக, அவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் வேலை கிடைக்க, தீயணைப்பு துறை உயர் அதிகாரி பல உதவிகளை செய்துக் கொடுக்கிறார்.

இதற்கிடையே மருத்துவம் படிக்கும் நிக்கி கல்ராணிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் காதல் நெருப்பு போல சட்டென்று பற்றிக் கொள்ள, குஷியாகும் விக்ரம் பிரபுவை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக, தீயணைப்பு துறை பணிக்கான தேர்வு கடிதம் வந்துவிடுகிறது. இப்படி அனைத்தும் சரியாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் பிரபுவின் நண்பர் வருண் சூழ்நிலைக் காரணமாக சென்னையை ஆட்டிப்படைக்கும் பெரிய ரவுடியின் மரணத்திற்கு காரணமாகிவிடுகிறார். அந்த ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்க அவரது நண்பரான மற்றொரு ரவுடி விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர்களை தேடிக் கொண்டிருக்க, அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகும் விக்ரம் பிரபுக்கு, முகம் தெரியாத புது புது எதிரிகள் உருவாக, அதனால் தனது அப்பாவை இழப்பதோடு, நண்பர்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான அந்த முகம் தெரியாத எதிரி யார், அவரை விக்ரம் பிரபு எப்படி வீழ்த்தினார், தனது லட்சியமான தீயணைப்பு வீரராக ஆனாரா இல்லையா, என்பது தான் ‘நெருப்புடா’ படத்தின் மீதிக்கதை.

படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரம் பிரபு, தீயணைப்பு வீரராக இப்படத்தில் தனது பங்களிப்பை ரொம்ப அதிகமாகவே கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் எப்படி ஸ்கோர் செய்கிறாரோ அதைவிடவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருப்பவர், பஞ்ச் வசனங்கள் பேசாமலே ஹீரோயிஷத்தை காட்டுவதோடு, கதைக்கு ஏற்ற நடிகராகவும் ஜொலிக்கிறார். தன் கதாபாத்திரம் உணர்ந்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். வெற்றி முக்கியம் என்பதையும் காட்சிக்கு காட்சி உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

நிக்கிகல்ராணி படத்தின் நாயகி நெருப்புக்கே நெருப்பு, என்பது போல கோவிலில் ஏற்படும் தீயை படு சாமர்த்தியமாக அனைத்து விக்ரம் பிரபுவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நிக்கி கல்ராணியின் வேடத்திற்கான வேலை குறைவானதாக இருந்தாலும், தீயணைப்பு துறை உயர் அதிகாரியின் மகளாக அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்தது, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியது என்று அவரும் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

வருண் உள்ளிட்ட விக்ரம் பிரபுவின் நண்பர்களாக நடித்தவர்கள், ஆடுகளம் நரேன், பொன்வண்ணன் என்று அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். நான் கடவுள் ராஜேந்திரனை காமெடிக்காக மட்டும் பயன்படுத்தாமல் சற்று குணச்சித்திர வேடத்திலும் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், அவரது காமெடி தான் எடுபடமால் போய்விட்டது.

நெருப்பு போல பரபரப்போடு தொடங்கும் படம் அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு விறுவிறுப்பாக நகர்கிறது. ரவுடியின் கொலைக்கு காரணமாகிவிட்ட விக்ரம் பிரபு மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்வார்களா? என்ற கேள்வி எழும்போது, அவர்கள் தப்பிக்கும் விதம் படத்திற்கு சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. அதிலும் தப்பித்து விட்டோம்டா சாமி, என்று விக்ரம் பிரபு பெருமூச்சு விடும் நேரத்தில் அவரது நண்பர்கள் செய்யும் வேலையால் மீண்டும் வில்லனிடம் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட, அதிலும் அவர்கள் எஸ்கேப் ஆவது போல காட்சியை திசை திருப்பிய இயக்குநர் திரைக்கதையை கச்சிதமாக கையாண்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புக் கொண்ட கண்ணகி நகரை பிரம்மாண்டமாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், அழகாகவும் காண்பித்திருக்கிறார். அழுக்கு நிறைந்த பகுதிகளைக் கூட தனது பிரேம் மூலம் அழகு நிறைந்த பகுதியாக காட்டியிருக்கும் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா நெருப்பின் சூட்டை நாம் உணரும்படி செய்கிறது. ஷான் ரோலாண்டின் இசையில் சில பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படியாக உள்ளது. மெலோடியான பாடல்கள் மட்டும் இன்றி, தாளம் போடும் வகையிலும் சில பாடல்களை கொடுத்திருப்பவர், பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார்.

சாதாரண ஒரு கதையை, திரைக்கதை மூலம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கும் இயக்குநர் அஷோக் குமார், வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் பல ட்விஸ்ட்டுகளை வைத்து படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.

முதல் பாதியை ஆக்‌ஷன் மசாலா படமாக நகர்த்தும் இயக்குநர், இரண்டாம் பாதியில் வைத்திருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் அந்த முகம் தெரியாத வில்லன் வேடம், அந்த கதாபாத்திரம் விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்குவதற்கான காரணம் உள்ளிட்டவை படத்தை க்ளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் நம்மை மிகவும் மிரட்டியுள்ளார் என்று தான் சொல்லணும்

மொத்தத்தில் நெருப்புடா டைட்டில் போலவே படத்தி சும்மா பயங்கராமாக விறுவிறுப்புடன் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை நகர்த்தியுள்ளார். Rank – 3.5/5

Leave a Reply