நெருப்புடா – திரைவிமர்சனம் (விறுவிறுப்பு) Rank – 3.5/5
தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு புது இயக்குனர் அதிலும் சிறந்த இயக்குனர் முதல் படம் இதுவரை யாரும் கால் பதிக்காத தீயணைப்பு வீரர்கள் புதிய களம் புதிய திரைகதை மேலும் ஒரு வித்தியாசமான யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் பார்த்த கதையென்றாலும் வித்தியாசமான திரைகதை திரிந்த முகங்கள் இதுவரை பார்க்காத நடிப்பு இயக்குனர் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் சிறப்பாக கவனித்து செயல்பட்டுள்ளார் என்று தான் சொல்லணும்
விக்ரம் பிரபுக்கு நிச்சயமான ஒரு சாவலான கதை அதை மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் படத்தில் பல காட்சிகளில் மிக அதிகமான ரிஸ்க் எடுத்துள்ளார் கதையின் ஓட்டம் அறிந்து தன்னை தயார்படுத்தி இயக்குனருக்கு பலம் சேர்த்துள்ளார். நெருப்புடன் அதிகமாக விளையாடியுள்ளார் இந்த ரிஸ்க் வேண்டுமா என்று கேட்க்க தோன்றுகிறது முதல் காட்சியிலே விக்ரம் பிரபு நெருப்புடன் சவாலை மிக அழகா தைரியமாக செய்து இருப்பது பாரட்ட வேண்டிய விஷயம் அத...

