Wednesday, June 24
Shadow

எதிரிகளை நண்பர்களாக்கிய நெருப்புடா இசைவெளியீட்டு விழா மேடை

தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்தியா சினிமாவின் ஒரே கம்பீரம் என்றால் அது நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்று உலகத்துக்கு தெரிந்த விஷயம் அவரின் வாரிசுகளில் சினிமாவில் ஜொலித்தது என்றால் அது பிரபு தற்போது ஜொலிப்பது பிரபுவும் அவரது மகன் விக்ரம் பிரபு என்று சொல்லலாம் தனக்கு என ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டார் என்று தான் சொல்லணும். நடிப்பில் தடம் பதித்த விக்ரம் பிரபு தன் தாத்தா அப்பா மாதிரி இவரும் தயாரிப்பில் இறங்கிவிட்டார்.

தம் முதல் தயாரிப்பே முத்திரை பதிக்கவேண்டும் என்று சிறந்த கதை ஒன்றை தேந்தெடுத்து நடித்துள்ளார் படத்தின் தலைப்பில் தனித்துவம் காண்பித்துள்ளார் என்று தான் சொல்லணும். படத்தின் ரஜினியின் பாடல்வரியில் இருந்து எடுத்து உள்ளார். கபாலி படத்தின் பாடல் நெருப்புடா என்று தலைப்பு வைத்துள்ளார் தலைப்புக்கு எற்ப கதை தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லபடாத விஷயம் தீயணைப்பு துறையை தேர்ந்தெடுத்துள்ளார். அறிமுக இயக்குனர் என்றாலும் படத்தின் ட்ரைலர் நமக்கு பல பிரமிப்பு உண்டுபண்ணியுள்ளது என்று தான் சொல்லணும் இன்று இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடிகர்திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக சினிமாவின் முக்கிய எல்லா வி.ஐ.பி.கள் கலந்துகொண்டனர் குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினி சத்யராஜ் தாணு திரையரங்க உரிமையாளர்கள் தலைவர் பன்னீர்செல்வம் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் நடிகர்சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பு சங்க தலைவர் விஷால் பொருளார் பிரபு கார்த்தி பொன்வண்ணன் இயக்குனர் p.வாசு ராகவா லாரன்ஸ் இப்படி சொல்லி கொண்டே போகும் அளவுக்கு ஒரு பட்டியல் கலந்து கொண்டனர்.

இதில் குறிப்பாக ஒரு சில்லா நல்ல விஷயம் நடந்தது என்றும் சொல்லலாம் தாணு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொண்டது பக்கத்தில் அமர்ந்தது ரஜினி சத்யராஜ் தாணு விஷால் பேசியதை முன் மொழிந்தது மிகவும் நல்லவிஷ்யங்கள் நடந்த ஒரு விழாவாக அமைந்தது என்று தான் சொல்லணும் .

விழாவில் முதலில் பேசிய விஷால் நான் நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பு சங்க தலைவர் மற்றும் ஒரு மனுஷனாக பத்திரிக்கையாளர்களிடம் கேப்பது திரைவிமர்சனம் தயவுசெய்து ஒரு படம் ரிலீஸ் ஆன மூன்று நாளுக்கு அப்புறம் போடுங்க என்று கேட்டு கொண்டார் இதை மேடையில் பேசிய ரஜினிகாந்த் முதல் வழிமொழிந்தனர் இதனால இன்னிக்கி ஹீரோ விஷால் என்று தான் சொல்லணும் இதனத கருத்தை அனைவரும் வலியுறுத்தி பேசினார்கள் .

பின்னர் பேசிய ரஜினிகாந்த் தன் மனதில் இருந்த ஒரு விஷயத்தை போட்டு உடைத்தார் அது விநியோகிஷ்த்ர்களை பற்றி ஒரு படம் வாங்கும் போது அந்த படம் என்ன மாதிரியான படம் இது எந்த அளவுக்கு வியாபாரம் ஆகும் என்று ஆராய்ந்த பின்னர் வாங்குங்க வாங்கிவிட்டு படம் சரியாபோகவில்லை என்றால் அந்த தயாரிப்பாளர் துன்புறுத்தி பார்காதிங்க என்று பகிரங்கமாக பேசினார் இதற்கு காரணம் லிங்கா படத்தினால் இவாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் தான் முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம் ஏன் என்றால் அந்த அளவுக்கு அவரை அசிங்கபடுத்தியுள்ளனர் ஒரு சில விநியோகிஸ்தர்கள் மற்றும் ரஜினிகாந்த் பேசுகையில் சிவாஜி கணேசன் காலத்தில் அவருக்கு போட்டி யாரும் இல்லை ஆண்டும் இல்லை இன்றும் இல்லை என்று கூறினார் .

படங்களை விமர்சனம் செய்வது அவரவர் உரிமை, ஆனால் விமர்சனம் செய்வதற்கும் ஒரு விதம் உள்ளது அதற்கு எற்ப விமர்சனம் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

எலியும் பூனையுமா இருந்த விஷால் தாணு , விஷால் பேசியதை பாராட்டி பேசிய தாணு எதிரிகளாக இருந்த பன்னிர்செல்வம் தாணு மீண்டும் உறவாடியது ரஜினி மனதில் இறக்கமுடியாமல் இருந்த வினியோகிஸ்தர் சங்க பாரம் இறக்கிவைத்தது என்று பல நல்ல விஷயங்கள் நடந்த மேடை நெருப்புடா மேடை அன்னை இல்லத்தில் சிவாஜியின் ஆன்மா பலரை இன்று சேர்த்து வைத்தார் என்று தான் சொல்லணும்.

Leave a Reply