சூர்யாவின் என்.ஜி.கே படத்துக்கு ஐந்து இடங்களில் கத்திரி வைத்த சென்சார்
இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. எப்போது படம் வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி உற்சாகமூட்டின.
வரும் 31-ம் தேதி என்.ஜி.கே திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 28 நிமிடங...



