Friday, May 27
Shadow

ரசிகர்களுக்காக சூர்யாவின் புதிய முயற்சி

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை சூர்யா முடித்திருந்த நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான கேங் படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. முதல்முறையாக தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்கும் வகைளில் தனது குரலிலேயே சூர்யா டப்பிங் பேசியிருக்கிறார்.

இது தெலுங்கு சூர்யா ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என்கின்றனர்.

Leave a Reply