Monday, December 9
Shadow

A.R.முருகதாஸ்வுடன் மீண்டும் கூட்டணி சேரும் விஜய் உறுதியானது மேலும் பிரபல நடிகர் இந்த படத்தில் இணைகிறார்.

விஜய் 61 படத்தின் படபிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிப்பது முதல் முறை இதனால் ரசிகர்கள் மேலும் சந்தோஷத்தில் உள்ளனர் அது மட்டும் இல்லாமல் வெற்றி கூட்டணி வேறு சொல்லவா வேண்டும் மேலும் இப்படத்தின் சுவாரிசியம் என்றால் விஜய்யின் ராசி நடிகைகள் அதவாது 1௦௦ கோடி வசூல் நாயகிகள் வேறு இந்த படத்தில் சும்மா விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையபோகிறது. இதை விட விஜய் ரசிகர்களுக்கு மிகபெரிய சந்தோசம் என்னவென்றால் விஜய் 62 என்பது தான் உண்மை காரணம் விஜய்யின் பாக்ஸ் ஆபீஸ் இயக்குனர் A.R.முருகதாஸ்வுடன் இணைவது அது மட்டும் இல்லாமல் இப்போது இன்னும் ஒரு சந்தோசம் கூடுகிறது. அது என்ன தெரியுமா நடிகர் சிம்பு தான் இந்த படத்துக்கு இசையமைப்பாளர், என்று செய்திகள் கசிந்துள்ளது .

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை முடித்தவுடன், ராஜஸ்தான் செல்லவுள்ளது படக்குழு. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளார்கள்.

தற்போது மகேஷ்பாபுவை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்பட பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, 2017 தீபாவளி முதல் விஜய் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படம் குறித்த தகவல் வெளியான நேரத்தில், இதற்கு சிம்பு இசையமைக்கவுள்ளதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விசாரித்த போது, “படமே தற்போது தான் உறுதியாகியுள்ளது. மகேஷ்பாபு படத்தை முடித்தவுடன் தான் முழுமையாக விஜய் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். அதற்குள் சிம்பு இசையமைப்பாளர் என்று எப்படி தகவல் வெளியானது என்று தெரியவில்லை. இசையமைப்பாளர் குறித்து படக்குழு இன்னும் யாரையுமே தொடர்பு கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்கள்.

மேலும் சினி

Leave a Reply