Friday, January 17
Shadow

ஓவியா மனதை திருடிய புது காதலன் யார் தெரியுமா ?

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பல விதத்தில் பிரபலமடைந்தாலும், ஓவியாவின் பிரபலம் என்பது தனி ரகம் தான். ஆரவை துரத்தி துரத்தில் ஓவியா காதலித்தது பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, பிறகு அந்த காதல் தோல்வியே அவருக்கு பல ஆயிரம் ரசிகர்கள் கிடைக்கப்பதற்கான காரணமாக மாறிவிட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ஓவியா, காதலையும் காதலரையும் மறந்துவிட்டதாக கூறிய நிலையில் தான், ஓவியாவையும் ஆரவையும் மீண்டும் ஒன்று சேர்த்தது ஒரு படம். ஆம், புதிய படம் ஒன்றில் ஓவியாவும் ஆரவும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள். ஆனால், அப்படம் குறித்து இருவரும் வெளிப்படையாக எந்த தகவலும் கூறியதில்லை.

இந்த நிலையில், ஓவியாவுடன் ஜோடியாக நடிப்பதில் ஆரவ் பின் வாங்கியுள்ளார். அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதனால், அப்படத்தில் ஓவியாவுக்கு ஜோடியாக அன்சன் பால் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ரெமோ’ படத்தில் கீர்த்தி சுரேஷின் மாப்பிள்ளை வேடத்தில் நடித்திருந்த அன்சன் பால் தான், தற்போது ஓவியாவின் புதிய காதலர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply