Tuesday, November 17
Shadow

‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!

‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

1980-களின் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி ‘பத்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரெய்லரின் தொடக்கமே பத்தாவின் பெயரைச் சுற்றியுள்ள பரபரப்பை உருவாக்குகிறது. அவரது வீரத்தைப் பற்றி சிறுவர்கள் பேசும் காட்சிகளும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் கூறும் விஷயங்களும், பத்தா யார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால், டிரெய்லர் நகர நகர பத்தாவின் இன்னொரு பக்கம் வெளிப்படுகிறது. அதிரடியான ரௌடியாக அறிமுகமாகும் அவர், ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் இருக்கும் சாதாரண மனிதராகவும் தோன்றுகிறார். இதன் மூலம் பத்தாவின் வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு பரிமாணங்களை படம் பேசும் என்பது தெரிகிறது.

ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், டிரெய்லர் முழுவதும் நகைச்சுவைக்கும் குடும்ப உறவுகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் சில காட்சிகள் படத்தின் தனித்துவமான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

டிரெய்லரின் இறுதிப்பகுதி படத்தின் உணர்வுப்பூர்வமான கோணத்தை காட்டுகிறது. ‘செல்லமே மகளே’ பாடல் இடம்பெறும் காட்சியில், சிறுமி ஒருவர் “அப்பா வந்திருவார்ல அம்மா?” என்று கேட்க, சிறையில் இருக்கும் பத்தாவின் காட்சி வருகிறது. இதன் மூலம் பத்தா சிறைக்குச் சென்றதன் பின்னணி என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.

மேலும், படத்தின் 80-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் காட்சியமைப்பு, உடைகள், பின்னணி மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தக் காலத்தின் சூழலை திரையில் கொண்டு வர படக்குழு மேற்கொண்டுள்ள முயற்சி டிரெய்லரில் தெளிவாகத் தெரிகிறது.

பத்தா உண்மையில் யார்? ரௌடியாக இருக்கும் அவர் எப்படி குடும்பஸ்தனாக மாறுகிறார்? அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? அவர் ஏன் சிறைக்குச் செல்கிறார்? என்ற கேள்விகளை முன்வைத்து டிரெய்லர் முடிகிறது. அதே நேரத்தில் கதையின் முக்கிய திருப்பங்களை வெளிப்படுத்தாமல், படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் தூண்டும் வகையில் டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார்.

அஷ்வின் முருகன் இணை தயாரிப்பில், முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இயக்குநர் அட்லி இப்படத்தை வழங்குகிறார்.

ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உறவுகள், 80-களின் பின்னணி என வித்தியாசமான அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘பத்தா’, அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

 

‘Patta’ Trailer Out: Vijay Sethupathi Showcases a New Dimension in a Story of Action, Family and Mystery

The trailer of ‘Patta’, starring Makkal Selvan Vijay Sethupathi, has been released, offering a glimpse into a character with multiple shades. With the teaser and songs already creating interest, the trailer has further raised curiosity around the film.

Set against the backdrop of the 1980s, ‘Patta’ introduces Vijay Sethupathi as a character known for his fearless and powerful image. The trailer begins with two young boys discussing the exploits of Patta, creating an intriguing aura around the character. As people describe his courage and influence, the trailer establishes Patta as a man whom no one dares to challenge.

However, the story soon takes an unexpected turn. While Patta is introduced as a rowdy, the trailer gradually reveals another side of his personality — that of a family man. This contrast forms one of the interesting aspects of the trailer and hints that there is much more to Patta than his tough exterior.

Packed with action sequences, the trailer also brings in plenty of humour and family emotions. The narrative appears to revolve around Patta, the people around him and the relationships that shape his life, while keeping several important details under wraps.

The emotional core of the film comes into focus towards the end of the trailer with visuals from the song ‘Chellamae Magalae’. When a little girl asks, “Will Dad come back, Mom?”, the trailer cuts to Patta in prison. The sequence raises an important question about what happened in Patta’s life and why he ended up behind bars.

The trailer also gives a glimpse into the film’s carefully recreated 1980s setting. The costumes, production design, locations and overall visual treatment appear to complement the period in which the story unfolds.

At the same time, the trailer leaves audiences with several questions: Who is Patta really? What is the story behind his different sides? How does a feared rowdy become a family man? And why is he in prison?

Bringing together action, comedy, family emotions and mystery, the trailer avoids revealing the film’s major twists while creating curiosity about the story and Vijay Sethupathi’s character.

Directed by Balaji Tharaneetharan, ‘Patta’ stars Vijay Sethupathi and ‘Jai Bhim’ fame Lijomol Jose in the lead roles. Harikrishnan, Shanti Balachandran, Arjun Chidambaram, Ajay Ghosh and Deepa Venkat are also part of the cast in key roles.

Sai Abhyankkar has composed the music, while Selvakumar S.K. is the cinematographer and R. Kalaivanan handles the editing. T. Muthuraj is the production designer.

Ashwin Murugan serves as co-producer, while Murad Khetani, Priya Atlee, Alok Jain and Ajit Andhare have jointly produced the film. The film is presented by director Atlee and produced by Star Studio18, A For Apple Studios and Cine1 Studios Production.

‘Patta’ is set to hit theatres worldwide on October 1.